மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற உள்ள மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் தொடர்பாக மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரியில் ஊராட்சிமன்ற தலைவர்கள், ஊராட்சி செயலர்கள், ஊாக்குவிப்பாளர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தலைமையில் நடைபெற்றது.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க தமிழகம் முழுவதும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் மற்ற நாட்களிலும் அங்காங்கே கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசியை பொறுத்தவரை தேவையான அளவு கையிருப்பு உள்ளது. ஒருசில ஊராட்சிகளில் தடுப்பூசி போட்டுக்கொள்வடர்களின் எண்ணிக்கை பிரதிநிதிகள், ஊராட்சி குறைவாக செயலர்கள், ஊக்குவிப்பாளர்கள் பதிவாகிறது. இதுவரை எனவே உள்ளாட்சி கொரோனா தடுப்பூசி போடாதவர்களை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்குவிக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதினால் பக்கவிளைவுகள் ஏதும் ஏற்படாது, தேவையற்ற வதந்திகளை கைவிட்டு தடுப்பூசி போட்டுக்கொள்வதே உயிரை பாதுகாத்து கொள்வதற்கான ஒரே ஆயுதம், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் உயிருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
ஊராட்சிமன்ற தலைவர் இம்மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமினை சிறப்பாக நடத்துவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். தங்கள் ஊராட்சிகளில் கொரோனா தடுப்பூசி போடாத மக்களிடம் கொரோனா தடுப்பூசியின் அவசியத்தை எடுத்துகூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள செய்ய வேண்டும். ஒவ்வொரு ஊராட்சிகளிலும் 100 சதவீத மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான பணிகளில் அந்தந்த உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், ஊராட்சி செயலர்கள், ஊக்குவிப்பாளர்கள் ஈடுப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் முருகண்ணன், சுகாதாரத்துறை துணை இயக்குநர் மருத்துவர் பிரதாப் குமார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், அரசு அலுவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.