0 0
Read Time:5 Minute, 20 Second

டெல்லி அணிக்கு எதிரான குவாலிபயர் 2வது ஆட்டத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

நடப்பாண்டுக்கான ஐபிஎல் போட்டி இந்தியாவில் தொடங்கியது. கொரோனா அச்சுறுத்தலால் 29 போட்டிகள் முடிந்த நிலையில் ரத்து செய்யப்பட்ட போட்டியானது ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19ம் தேதி தொடங்கியது. அதன்பின் நடைபெற்ற லீக் போட்டிகளில் டெல்லி, சென்னை, பெங்களூரு, கொல்கத்தா உள்ளிட்ட அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன. இறுதிப் போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. வெளியேற்றுதல் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை வென்றது.

KKR vs DC Highlights, IPL 2021 Qualifier 2: Kolkata win thriller by 3  wickets to advance to the final, Delhi knocked out | Hindustan Times

இந்நிலையில் இறுதிப்போட்டிக்கு செல்லும் 2-வது அணி எது? என்பதற்கான இரண்டாவது தகுதி சுற்று போட்டி இன்று நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரிட்சையில் ஈடுபட்டன. இதில் கொல்கத்தா அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா, ஷிகர் தவான் களமிறங்கினர்.
முன்னதாக நடைபெற்ற சென்னை அணிக்கு எதிரான வெளியேற்றுதல் சுற்றில் பிரித்வி ஷா 34 பந்துகளுக்கு 60 ரன்கள் விளாசியிறுந்தார். இதனால், அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், கொல்கத்தா அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக பிரித்வி ஷா 18 ரன்களில் LBW முறையில் அவுட்டாகினார். பின்னர் வந்த ஸ்டோனிஸ் 18 ரன்களில் வெளியேற அடுத்து வந்த ஸ்ரேயாஸுடன் இணைந்து தவான் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.

இந்நிலையில், தவான் 36 ரன்கள் அடித்த நிலையில் அவுட்டாகி வெளியேற பின்னர் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 5 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் எடுத்திருந்தனர். ஸ்ரேயாஸ், அக்ஸர் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர். அணியில் அதிகபட்சமாக தவான் 36 ரன்னும், ஸ்ரேயாஸ் 30 ரன்னும் எடுத்தனர்.

IPL 2021 New Dates: Schedule, Venue, Time, Live streaming, Final, team

இதைத்தொடர்ந்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரர்கள் சுப்மான் கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் அணியின் டெல்லி அணி பந்துவீச்சாளர்களின் பந்துகளை மைதானத்தின் நாளா புறமும் சிதறவிட்டனர். கொல்கத்தா அணியின் வெற்றி உறுதியான நிலையில், ஆட்டத்தின் 12.2வது ஓவரில் 41 பந்துக்கு 55 ரன்கள் விளாசிய நிலையில் வெங்கடேஷ் ஐயர் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இவரைத்தொடர்ந்து களமிறங்கிய நிதிஷ் ராணா 13 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். இவரைத்தொடர்ந்து சுப்மான் கில்லும் 46 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறி பின்னர் வந்த தினேஷ் கார்த்திக் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி வெளியேற ஆட்டத்தில் சூடு பிடித்தது.

பின்னர் வந்த மோர்கன், ஷாகிப் அல் ஹசன், சுனில் நரைன் ஆகியோரை ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி டெல்லி பந்து வீச்சாளர்கள் கொல்கத்தா அணி வீரர்களுக்கு சிறு பயத்தை காட்டினர். ஆட்டத்தின் கடைசி ஓவரின் 5வது பந்தில் அஸ்வின் வீசிய பந்தை எதிர்கொண்ட திரிபாதி 6 விளாசி கொல்கத்தாவை வெற்றி பெற வைத்தார். நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் சென்னை அணியுடன் கொல்கத்தா அணி பலப்பரிட்சையில் ஈடுபட உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %