0 0
Read Time:1 Minute, 31 Second

சைவ ஆதீனங்களில் ஒன்றாகவும் ஆன்மீகம் மற்றும் தமிழ் வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகித்து வரும் மயிலாடுதுறை மாவட்டம் திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்தில் விஜயதசமி பெருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மடத்தின் ஒடுக்கத்தின் அருகே ஆதீனத்தால் வெளியிடப்பட்ட சிறப்பு நூல்களைக் கொண்டு துர்கா தேவி சரஸ்வதி, லட்சுமி உள்ளிட்ட தெய்வங்களாக அலங்கரிக்கப்பட்டு தொடர்ந்து சிறப்பு பூஜைகளுடன் தீபாராதனை நடைபெற்றது.

திருமடத்தின் வழக்கப்படி பனை ஓலையில் எழுதும் வித்யாரம்பம் நிகழ்வும், ஆதீன புலவர் குஞ்சிதபாதம் இயற்றிய அருளினந்தி சிவம் மாலை எனும் பத்து பாடல்கள் அரங்கேற்ற நிகழ்வும் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு மலர்கள் வெளியிட்டும் பக்தர்களுக்கு திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அனைவருக்கும் அருளாசி வழங்கினார்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %