0
0
Read Time:1 Minute, 15 Second
இந்தியாவின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங். இவர் கடந்த வருடம் இன்ஸ்டாகிராம் லைவ்வில் இந்திய கிரிக்கெட் அணி துணை கேப்டன் ரோகித் சர்மாவுடன் உரையாடினார். அப்போது, பந்து வீச்சாளர் யஷ்வேந்திர சஹாலின் டிக்டாக் வீடியோவை வைத்து சாதிய ரீதியாக யுவராஜ் சிங் விமர்சித்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து பலரும் அவரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து யுவராஜ் தனது சமூகவலைதள பக்கத்தின் மூலமாக இதற்கு மன்னிப்பு கோரினார். அதேநேரம் வழக்கறிஞர் ஒருவர் அவர் மீது காவல் நிலையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், அந்த வழக்கில் யுவராஜ் சிங்கை அரியானா போலீசார் கைது செய்தனர். பின்னர் சில மணி நேர விசாரணைக்கு பின்னர் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.