கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ளது அரசன்குடி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி விநாயகமூர்த்தி. இவர் விவசாய தொழில் மற்றும் அதனுடன் ஆடு வளர்ப்பு தொழிலும் செய்துவருகிறார். சமீபத்தில் இவர் தனது வயலில் ஆட்டுப்பட்டி அமைத்து அதில் ஆடுகளைச் அடைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது அதில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளில் 15 ஆடுகளைக் காணவில்லை. இதுகுறித்து சிறுப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கமல்ஹாசன் வழக்குப் பதிவுசெய்து தீவிர விசாரணை மேற்கொண்டார்.
அதில் விநாயகமூர்த்தியின் வயலுக்குப் பக்கத்து வயலில் வேலை செய்தவர்கள் சிலரிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதில் சந்தேகம் அடைந்த போலீசார், அதில் மூவரைக் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரசாந்த், பிரவீன்குமார், இளங்கோவன் என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் விவசாய வேலை செய்வதுபோல் வெளியூர்களுக்குச் சென்று, அப்பகுதியில் ஆடு, மாடுகள் மேய்வதையும் அவை இரவு நேரங்களில் அடைக்கப்பட்டிருக்கும் பட்டிகளையும் நோட்டம் பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அவற்றை ஆடு, மாடுகளைப் பறிகொடுத்தவர்களிடம் ஒப்படைத்தனர். ஆடு, மாடு கடத்தலில் ஈடுபட்ட மேற்படி மூவர் மீதும் வழக்குப் பதிவுசெய்து சிறையில் அடைத்துள்ளனர். சில ஆண்டுகளாகவே வேப்பூர், லக்கூர், தொழுதூர், சிறுபாக்கம் ஆகிய பகுதிகளில் அவ்வப்போது இரவு நேரங்களில் ஆடு, மாடுகளைப் பில்டர்கள் டாட்டா ஏசி வாகனங்களில் கடத்திச் செல்லும் சம்பவம் நடைபெற்றுவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஆடு, மாடு திருடர்கள் சிலரை சிறுபாக்கம் போலீசார் கைதுசெய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.