மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி திங்கள் கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருக்கடையூர் மெயின்ரோட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொள்ளிடம் முதல் பொறையார் வரை என்.எச் 45,-ஏ நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக கொள்ளிடத்திலிருந்து பொறையார் வரை உள்ள நிலம், வீடு, கையகப்படுத்தும் பணி நடைப்பெற்று வருகிறது. இந்த நிலையில் நிலம் கையகப்படுத்தப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காமலும், குடியிருப்பவர்களுக்கு மாற்று இடமும் வழங்கக்கோரியும், உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வலியுறுத்தியும் சாலை பணிகளை செய்து வரும் நெடுஞ்சாலை துறையினரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தரங்கம்பாடி ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார், மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாவட்ட குழு உறுப்பினர் சிம்சன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரைராஜ், ஒன்றிய குழு உறுப்பினர்கள் காபிரியேல், ஐயப்பன், குணசுந்தரி, சந்திரமோகன், குணசேகரன், கிளை செயலாளர் உதயகுமார் ஆகியோர் ஆர்பார்ட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த சீர்காழி டேட்டா போறயா ராஜா காவல் துணை கண்காணிப்பாளர் லாமேக், பொறையார் காவல் ஆய்வாளர் சிங்காரவேலு, சீர்காழி காவல் ஆய்வாளர் மணிமாறன், புதுப்பட்டினம் ஆய்வாளர் சந்திரா, தரங்கம்பாடி வட்டாட்சியர் ஹரிதரன் உள்ளிட்ட அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.