நாகை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இரு கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் இடையே தகராறு ஏற்பட்டு, ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரின் மீன்பிடி வலைகளை சேதப்படுத்தி, விரட்டியடித்த காட்சிகள் வெளியாகியுள்ளன.
தடை செய்யப்பட்ட இரட்டை மடி, சுருக்குமடி வலைகள் மற்றும் ஸ்பீடு எஞ்சின்கள் பயன்படுத்துவது தொடர்பாக ஏற்கனவே நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மீனவர்கள் இடையே பிரச்சனை இருந்து வருகிறது. இந்த நிலையில், நாகை அருகே சுமார் 15 பைபர் படகில் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, மற்றொரு கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஸ்பீடு எஞ்சின் பொருத்தப்பட்ட விசைப்படகுகள் மூலம் வலைகளை சேதப்படுத்தி விரட்டியடித்ததாக புகார் எழுந்துள்ளது. மீன்பிடிக்க விடாமல் தடுத்து 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வலைகளை சேதப்படுத்தி விரட்டியடித்ததாக புகார் எழுந்துள்ளது.