0 0
Read Time:1 Minute, 23 Second

நாகையில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் மது குற்ற வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சாராய பாட்டில்கள் மற்றும் மதுபாட்டில்கள் போலீஸ் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்தன. இவை நீண்ட நாட்களாக போலீஸ் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளதால் துர்நாற்றம் விசுவதாலும், தீ விபத்து ஏற்பட  வாய்ப்புள்ளதாலும், இதனை அளித்து அப்புறப்படுத்த மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் ஆகியோர் உத்தரவிட்டனர். 

இதை தொடர்ந்து போலீஸ் நிலையங்களில் இருந்து 11,832 மதுபானம், 3,327 லிட்டர் சாராயம் ஆகியவற்றை நாகை பாப்பாகோவில் சுடுகாடு பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் கலால் துறை உதவி ஆணையர் குணசேகர் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி ஆகியோர் முன்னிலையில்  சாராயம் மற்றும் மதுபானத்தை கீழே ஊற்றி போலீசார் அழித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %