0 0
Read Time:5 Minute, 21 Second

பிரித்விராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில், 125ஆண்டு பழமையான முல்லைப் பெரியாறு அணை பலவீனமானமாக இருப்பதாக கருத்து பதிவிட்டிருந்தார்.‌

பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ் தனது டிவிட்டர் 125ஆண்டு கால பழமையான முல்லைப் பெரியாறு அணை பலவீனமானமாக இருப்பதாக கூறி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த நிலையில், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ்-ன் உருவப்படத்தை எரித்து அகில இந்திய பார்வேர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136அடியாக உயர்ந்தை அடுத்து கேரளாவில் உள்ள சிலர் அணைக்கு எதிராக விஷமக் கருத்துக்களை பரப்பி வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டல், வழக்கறிஞர் ரசூல் ஜோய், மருத்துவர் ஜோசப் வரிசையில் தற்போது பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், 125ஆண்டு கால பழமையான முல்லைப் பெரியாறு அணை பலவீனமானமாக இருப்பதாக கூறி நேற்று கருத்து பதிவிட்டிருந்தார்.‌

அவரது இந்த கருத்து தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக விஷமக் கருத்துக்களை பரப்பி வரும் செயலை கண்டித்து, தேனி மாவட்ட அகில இந்திய பார்வேர்டு பிளாக் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ் தனது டிவிட்டர் 125ஆண்டு கால பழமையான முல்லைப் பெரியாறு அணை பலவீனமானமாக இருப்பதாக கூறி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த நிலையில், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ்-ன் உருவப்படத்தை எரித்து அகில இந்திய பார்வேர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பாக நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக தொடர்ந்து சமூக வலைதளங்கள் தவறான தகவல்களையும் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்வதை மும் வாடிக்கையாக கொண்டுள்ள வழக்கறிஞர் ரசூல் ஜோய், மற்றும் மலையாள நடிகர் பிரித்விராஜ் ஆகியோரை கண்டித்து கோசங்களை எழுப்பினர்.‌

இதனிடையே திடீரென யாரும் எதிர்பாராத நேரத்தில், நடிகர் பிரித்விராஜ், வழக்கறிஞர் ரசூல் ஜோய் ஆகியோரின் உருவப்படத்தை தீயிட்டு எரித்தனர். மேலும் தங்கள் காலணிகளை கழற்றி இருவரது உருவப்படத்திலும் அடித்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதனால் ஆட்சியர் அலுவலகம் சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.

இது தொடர்பாக தேனி மாவட்ட அகில இந்திய பார்வேர்டு பிளாக் கட்சி பொதுச் செயலாளர் எஸ்.ஆர்.சக்கரவர்த்தி கூறுகையில், பல்வேறு நிபுணர் குழுக்களால் ஆய்வு செய்யப்பட்டு உறுதியாக உள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தி கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தவறான கருத்துக்களை பரப்பி வரும் வழக்கறிஞர் ரசூல் ஜோய், நடிகர் பிரித்விராஜ் உள்ளிட்டோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்க இருப்பதாக தெரிவித்தனர்.

மேலும், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் தமிழகத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள் என்று கேரள முதல்வர் பினராயி விஜயனின் கடித்தை தமிழக முதல்வர் ஏற்க கூடாது. முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டத்தை 142அடியாக உயர்த்துவதற்கு அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Source: News18

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %