0 0
Read Time:2 Minute, 22 Second

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூர் அருந்ததியர் தெருவில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் வசிப்பவர்கள் இறந்தால் அவர்கள் வசிக்கும் இடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மயானத்திற்கு உடலை கொண்டு சென்று அடக்கம் செய்ய வருகின்றனர். இந்நிலையில் இந்த மயானத்திற்கு செல்வதற்கான சாலை சில ஆக்கிரமிப்பு காரர்களால் ஆக்கிரமிக்க பட்டுள்ளது. இதனால் இறந்தவரின் உடல்களை அடக்கம் செய்ய பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். சுடுகாட்டிற்கான உரிய பாதையை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால், அப்பகுதி இறப்பவர்களின் உடலை மிகுந்த சிரமத்துடன் தோளில் சுமந்து கொண்டு வயலை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. 

இதுகுறித்து அப்பகுதி மக்கள் சார்பில் பலமுறை கோரிக்கை விடுத்தும் மயான சாலையின் ஆக்கிரமிப்புகளை அகற்றி இன்றுவரை புதிய சாலை அமைத்து தரப்படவில்லை. இந்நிலையில் இப்பகுதியை சேர்ந்த ராமயுயன் என்பவர் வயது முதிர்வின் காரணமாக உடல் நலம் குன்றி இருந்தவர் நேற்று திடீரென இறந்துள்ளார். அவரின் உடலை கிராம மக்கள் மிகுந்த சிரமத்துடன் தோளில் சுமந்தபடி ஒரு கிலோ மீட்டர் தூரம் நடவு செய்யப்பட்ட வயலில் தூக்கி சென்று மயானத்தில் அடக்கம் செய்துள்ளனர். தொடர்ந்து இந்த நிலை நீடிக்காமல் இறந்தவர்களின் உடலை இறுதி யாத்திரையாக மயானத்திற்கு கொண்டு செல்ல மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் என  அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %