0 0
Read Time:3 Minute, 58 Second

கடலுார்-தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து வெளியூர்களுக்கு 170 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

தீபாவளி பண்டிகை வரும் 4ம் தேதி வருகிறது. ஜவுளி, மளிகை, இனிப்பு உள்ளிட்ட பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. அதனால் பஸ்களில் பயணிகள் எண்ணிக்கையும் கூடியுள்ளது. தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட வெளியூர்களில் தங்கி வேலை செய்யும் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் தனியார் ஆம்னி மற்றும் அரசு பஸ்களில் முன்பதிவு செய்து வருகின்றனர்.

ஆனால் பலருக்கு முன்பதிவு கிடைக்கவில்லை. இதனை கருத்தில் கொண்டு அரசு போக்குவரத்துக் கழகம் பொது மக்கள் வசதிக்காக பல்வேறு சிறப்பு பஸ்கள் இயக்க முன்வந்துள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கடலுார் மண்டல பொது மேலாளர் மாரியப்பன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:பொது மக்கள் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்(விழு)லிட், கடலுார் மண்டலம் சார்பில் நவம்பர் 1, 2 மற்றும் 3 தேதிகளில் சென்னையிலிருந்து புதுச்சேரி, கடலுார், சிதம்பரம், விருத்தாசலம், திட்டக்குடி, நெய்வேலி டவுன்ஷிப், காட்டுமன்னார்கோயில், கும்பகோணம், திருச்சி மற்றும் சேலம் ஆகிய பகுதிகளுக்கு 170 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. மேலும், பொது மக்களின் தேவைக்கேற்ப கூடுதல் பஸ்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கடலுார் மண்டலம் சார்பில் கோயம்பேடு பஸ் நிலையத்திலிருந்து திட்டக்குடி, விருத்தாசலம், திருச்சி மற்றும் சேலம் ஆகிய பகுதிகளுக்கும், தாம்பரம் ரயில் நிலையம் மற்றும் பஸ் நிலையத்திலிருந்து புதுச்சேரி, கடலுார், சிதம்பரம் (வழி மதுராந்தகம், திண்டிவனம் மற்றும் சிதம்பரம், பண்ருட்டி, நெய்வேலி டவுன்ஷிப், காட்டுமன்னார்கோயில் (வழி) விக்கிரவாண்டி, பண்ருட்டி) ஆகிய பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

சென்னை கே.கே.நகர் மாநகர பஸ் நிலையத்திலிருந்து புதுச்சேரி, கடலுார், சிதம்பரம் (வழி கிழக்கு கடற்கரை சாலை) ஆகிய பகுதிகளுக்கும், தாம்பரம் சானிடோரியம் அண்ணா பஸ் நிலையத்திலிருந்து கும்பகோணத்திற்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன. தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை திரும்புவோருக்காக நவம்பர் 5 முதல் 8 ம் தேதி வரை பஸ்கள் இயக்கப்படவுள்ளன. மேலும் கூட்டம் அதிகம் இருக்கும் பகுதியில் இருந்து பொது மக்கள் சிரமம் இல்லாமல் செல்வதற்கு சிறப்பு பஸ்கள் இயக்க பல பஸ்கள் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் கோட்ட, கடலுார் மண்டல பொதுமேலாளர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %