மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம் பழைய கூடலூர் ஊராட்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் குடும்பத்தின் சார்பாக தீப ஒளி திருநாள் பண்டிகையை முன்னிட்டு கிராம மக்களுக்கு புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தீப ஒளி திருநாள் பண்டிகையை முன்னிட்டு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் குடும்பத்தின் சார்பாக கிராம மக்களுக்கு ஆண்டுதோறும் புத்தாடைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் புத்தாடைகள் வழங்கும் நிகழ்வு பழைய கூடலூரில் அமைந்துள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இராசா மாணிக்கத்தின் மணி மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் மயிலாடுதுறை அருண் பிரியா மருத்துவமனையின் நிறுவனர் மருத்துவர்.இரா.செல்வம் தலைமையில் நடைபெற்றது. இதில் ஓய்வுபெற்ற கூட்டுறவுத் துறை அலுவலர் இரா.இராஜேந்திரன், ஸ்ரீகண்டபுரம் அரசு பள்ளி தலைமையாசிரியர் இரா.மதிவாணன், சுதா அண்ணாதுரை, மருத்துவர் செ.அருண்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
பழைய கூடலூர் ஊராட்சி மன்ற தலைவரும், குத்தாலம் ராஜ் வித்யாலயா கல்வி குழுமத்தின் நிர்வாக இயக்குனருமான இரா.பாண்டியன் பழைய கூடலூரில் உள்ள சுமார் 1500 மக்களுக்கு வேஷ்டி, புடவை மற்றும் தீபாவளி பரிசுப் பொருட்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் பழையகூடலூர் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கிராம தலைவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் மகிழ்வுடன் தீபாவளி பரிசுப் பொருட்களை பெற்றுக் கொண்டு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இராச மாணிக்கத்தின் குடும்பத்தினருக்கு நன்றிகளை தெரிவித்தனர்.
நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.