இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 12-ந்தேதி நடந்தது. கடலூர் மாவட்டத்தில் இந்த தேர்வை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர். இதில் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 457 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இவர்களில் 87 பேர் மாணவர்கள், 370 பேர் மாணவிகள் ஆவர். இந்நிலையில் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் இரவு வெளியானது. தேர்வு முடிவுகள் மாணவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் தேர்வு எழுதிய மாணவர்கள் உடனடியாக தங்களின் தேர்வு முடிவுகளை அறிந்து கொண்டனர். இதில் கடலூர் மாவட்டத்தில் அரசு, உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 457 பேரில் 95 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 14 மாணவர்கள், 81 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் அரசு பள்ளிகளில் மட்டும் படித்து தேர்ச்சி பெற்ற 50 பேர் தமிழக அரசின் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்து படிக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Read Time:1 Minute, 36 Second