0 0
Read Time:3 Minute, 12 Second

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்திலும் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வயல்களில் தண்ணீர் அதிக அளவு சூழ்ந்துள்ளது. இந்த சூழலில் குத்தாலம் தாலுக்காவிற்கு உட்பட்ட கொழையூர் கிராமத்தில் பல்லவன் வாய்க்கால், அண்ணாமலை வாய்க்கால்கள் இப்பகுதியின் பாசன வாய்க்கால் ஆகவும், வடிகால் வாய்க்கால் ஆகவும் இருந்து வருகிறது. 

தொடர் மழையால் மயிலாடுதுறையில் 500 ஏக்கர் சம்பா பயிர்கள் கடும் சேதம்...!

இந்த சூழலில் காவிரி கடைமடை மாவட்டமான மயிலாடுதுறையில் புதிதாக பொறுப்பேற்ற தமிழ்நாடு அரசு மேட்டூர் அணை திறப்பதற்கு குறுகிய காலம் மட்டுமே இருந்த நிலையில் வாய்க்கால்களை தூர்வார போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்தது. இருந்த போதும், பிரதான வாய்க்கால்கள் ஆன ஏ, பி வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டன. ஆனால் சி, டி என்று சொல்லக்கூடிய கிளை வாய்க்கால்கள் பெரும்பாலான இடங்களில் சரிவர   தூர்வாரப்படவில்லை. 

இதன்காரணமாக கொழையூர், பூவாலை, செங்குடி ஆகிய கிராமங்களில் கனமழையால் வயல் வெளிகளில் சூழ்ந்த வெள்ளநீர் வடிவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இப்பகுதிகளில் மழைநீர் பல்லவன் வாய்க்கால் மற்றும் அண்ணாமலை வாய்க்கால் ஆகியவற்றின் வழியே வடிந்து வீரசோழன் ஆற்றில் சென்று கலக்கும். வாய்க்கால்களை தூர்வார காரணத்தால் வெள்ள நீர் வடியாமல் சுமார் 500 ஏக்கரில் சம்பா இளம்நாற்றுகள் முற்றிலும் நீரில் மூழ்கி அழுகி விட்டன. இதனால் ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்த விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். மேலும் மழை காலம் தொடங்கிய போது இந்த நிலை என்றால் மேலும் மழை காலம் முடியும் வரை வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்க வெள்ள நீர் வடிவதற்கு வசதியாக விரைவாக வாய்க்கால்களை தூர்வார வேண்டும், மீண்டும் சம்பா சாகுபடி செய்வதற்கு அரசாங்கம் வேளாண் துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மயிலாடுதுறை மாவட்டவிவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %