Read Time:1 Minute, 23 Second
மயிலாடுதுறை மாவட்டம், லால்பகதூர் நகர் வீர பாண்டியர்கள் சிலம்பாட்ட பயிற்சி பள்ளி மைதானத்தில் சன் கிளப் மற்றும் செவன் ஸ்டார் கிளப் சார்பில் 5-ஆம் ஆண்டு கைப்பந்தாட்ட போட்டி துவக்க விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்து ஆட்ட நாயகர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பால.அருள்செல்வன், மயிலாடுதுறை நகர திமுக செயலாளர் குண்டாமணி என்கிற செல்வராஜ், செம்பை தெற்கு ஒன்றிய செயலாளர் அப்துல் மாலிக், மயிலாடுதுறை மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி அமைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் திமுக பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.