0 0
Read Time:4 Minute, 2 Second

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்துள்ள வாணாதிராஜபுரத்தை சேர்ந்தவர் ஹாஜாமைதீன் என்பவரின் மனைவி 90 வயதான மூதாட்டி  தாவூத்பீவி. இவர் கணவர் இறந்த பின்னர் அவரது வீட்டில் தனது இளைய மகன் அசரப்அலியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது மகன் வெளிநாடு சென்றதும் மருமகள் சிராஜிநிஷா கடந்த மாதம்  வீட்டைவிட்டு விரட்டி விட்டியுள்ளார். 

மாமியாரை வீட்டை விட்டு விரட்டிய மருமகள்கள்: ஜமாத்தார் முன்னிலையில் எச்சரித்த குத்தாலம் போலீசார்!

அதனைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் அளித்த உணவை உண்டுவந்த நிலையில் கடந்த மாதம் 4-ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் மனுநீதிநாள் முகாமில் கலந்துகொண்டு  தனது பிள்ளைகள் தன்னை ஏற்றுகொள்ளாமல், ஒருவேளை உணவுகூட கொடுக்க விருப்பம் இல்லாமல் துரத்தி வருவதாகவும், தனக்கு உரிய சொத்தை மகன்களிடம் இருந்து பெற்றுத்தர வேண்டும் எனவும் அதனை விற்று அதில் வரும் பணதை வங்கியில் செலுத்தி அதில் கிடைக்கும் வருவாயில் தனது இறுதி காலத்தை கழித்து கொள்ளவதாகவும், இல்லாவிடில் தன்னை கருணை கொலை செய்துவிடுமாறும் கோரியிருந்தார். இதையடுத்து, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவின் பேரில் வருவாய்துறையினர் அசரப்அலி வீட்டில் ஒப்படைத்து பத்திரமாக பார்த்துக்கொள்ள சொல்லி தங்க வைத்தனர். 

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மழை நேரத்தில் வீட்டைவிட்டு மீண்டும் தாவூத்பீவியை வெளியேற்றி வாசற்கதவை அவரது மருமகள் பூட்டியுள்ளார். இச்செய்தி ஊடகங்களில் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியது.  இச்சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் உத்தரவின் பேரில் குத்தாலம் காவல்துறையினர் மூதாட்டியின் மூத்தமகனை அழைத்து தாயை பாதுகாக்க தவறினால் சட்ட நடடிவக்கை எடுக்கப்படும் என்றும், உள்ளூர் ஜமாத்தார்கள் பேசி உடனடியாக தீர்வுகாண உத்தரவிட்டனர். 


அதன்பேரில் வானாதிராஜபுரம் ஜமாத்தார்கள் மற்றும் வட்டாரஜமாத் கூட்டமைப்பினர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி  மூத்தமகன் ஷேக்அலாவுதீன் வீட்டில் 2 மாதமும், இளையமகன் அசரப்அலி வீட்டில் 2 மாதமும் என மூதாட்டியை ஆயுட்காலம் முழுவதும் பராமரிப்பதென முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து, குத்தாலம் போலீசார் மூதாட்டியை ஷேக்அலாவூதீன் வீட்டில் ஒப்படைத்தனர். தாவூத்பீவியை முறையாக கவனித்து கொள்கின்றனரா என்பதைக் கண்காணிக்கவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் குத்தாலம் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து குத்தாலம் காவல்துறையினர் மூதாட்டியின் குடும்பத்தை கண்காணிப்பு வளையத்தில் வைத்து தினம் தோறும் மூதாட்டியின் வீட்டிற்கு சென்று கண்காணிக்க உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %