0 0
Read Time:2 Minute, 31 Second

சீர்காழி அருகே வடிகால் வாய்க்காலில் கழிவுநீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சீர்காழி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கன்னியாகுடி ஊராட்சியில் காந்திநகர் உள்ளது. இந்த பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கன்னியாகுடிக்கும்- காந்திநகருக்கும் இடையில் வாய்க்கால்  உள்ளது. இந்த வாய்க்கால் தான் மழைக்காலங்களில் கன்னியாகுடி ஊராட்சிக்கு முக்கிய  வடிகாலாக இருந்து வருகிறது.  இந்த வாய்க்காலில் கடைசி வரை தண்ணீர் செல்ல  வழி இல்லாததால் தற்போது காந்திநகர் அருகில் வடிகால் வாய்க்காலில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. 

 இந்த வாய்க்காலில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் மிதந்து வருகிறது. இதன் காரணமாக இந்த கழிவுநீரில் ஏராளமான புழுக்களும், கொசுக்களும் உற்பத்தி ஆகிறது. மழைக்காலங்களில் இந்த வாய்க்காலில் உள்ள கழிவுநீர் காந்தி நகர் முழுவதும் உள்ள சாலை மற்றும் குடியிருப்பு பகுதியில் தேங்கி துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் கன்னியாகுடி ஊராட்சியில் வடிகால் வாய்க்காலில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றி சுகாதாரப்பணி மேற்கொள்ள வேண்டும். மேலும் வரும் காலங்களில் வடிகாலில் கழிவுநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %