மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியின் பவள விழா ஆண்டினை நிகழாண்டு மாதந்தோறும் கொண்டாட முடிவெடுக்கப்பட்டுள்ளது. அவ்வகையில், பவள விழாவின் நான்காவது மாத விழா கல்லூரியின் கலையரங்கத்தில் கொண்டாடப்பட்டது.
தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு, மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு கல்லூரியில் மாணவர்களுக்கான உடற்பயிற்சிக் கூடத்தை திறந்து வைத்து, ஏழை எளிய மாணவிகள் 5 பேருக்கு தையல் இயந்திரம் மற்றும் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள 5 நபர்களுக்கு சலவைப் பெட்டி மற்றும் குறுங்காடு திட்டத்தில் மரக்கன்றுகள் வழங்கல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் மாண்புமிகு அமைச்சர் மற்றும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் கல்லூரி மாணவ மாணவிகளிடம் உடற்பயிற்சியை பற்றியும் குறுங்காடு வளர்ப்பு பற்றியும் மரங்களால் மனிதர்களுக்கு காற்று அளிக்கும் சதவிகிதத்தை பற்றியும் சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், பொருளாளர் ஜி என் ரவி, நகர செயலாளர் செல்வராஜ், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் டாக்டர் ராம.சேயோன், ஒன்றிய செயலாளர்கள் மங்கை சங்கர், அப்துல்மாலிக், இமய நாதன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி அமைப்பாளர் ஸ்ரீதர், கல்லூரி செயலாளர் செல்வநாயகம், கல்லூரி முதல்வர் சுவாமிநாதன் மற்றும் ஆதின நிர்வாகிகள் கழக பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.