கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மக்கள் அதிகம் கூடும் சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நடைமேடை சீட்டின் விலை ரூ.10ல் இருந்து ரூ.50 ஆக தெற்கு ரயில்வே உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இதற்கு மக்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் டிக்கெட் விலை உயர்வு தொடரும் என ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தற்போது தொற்று பரவல் குறைந்ததையடுத்து தமிழ்நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட்டின் விலை ரூ.10 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் இந்த விலைக்குறைப்பு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது.