0 0
Read Time:2 Minute, 27 Second

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அடுத்துள்ள காளகஸ்திநாதபுரத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கோமாரி நோய் தடுப்பு முகாம் மண்டல இணை இயக்குநர் சஞ்சீவிராஜ் தலைமையில் நடைப்பெற்றது.

ஒன்றியக்குழு தலைவர் நந்தினிஸ்ரீதர், ஊராட்சி தலைவர் ஜோதிவள்ளி, துணைத்தலைவர் சரவணன் ஆகியோர் முன்னிலையில் நடந்த முகாமை சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் துவக்கி வைத்தார்.

துணை இயக்குநர் மருத்துவர் சுப்பையன், உதவி இயக்குநர்கள் முத்துகுமரசாமி, கணேசன், மருத்துவர்கள் அன்பரசன், சுதா, ரமாபிரபா, சரவணன், காயத்ரி, மணிமொழி உள்ளிட்டோர் அடங்கிய மருத்துவக்குழுவினர் 426 மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தி தாது உப்பு கலவைகளை வழங்கினர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 1 லட்சத்து 32 ஆயிரத்து 426 பசு மற்றும் எறுமை மாடுகள் உள்ளதாகவும் , தற்போது முதற்கட்டமாக 5 ஆயிரம் கோமாரி தடுப்பூசி மருந்துகள் மாவட்டத்திற்கு வந்துள்ளதாகவும் படிப்படியாக அனைத்து மாடுகளுக்கும் முழுமையாக தடுப்பூசிகளை செலுத்தி விடுவோம் என்றும் முகாமில் கால்நடைகளின் பிற நோய்களுக்கும் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக கால்நடைத்துறை மண்டல இணை இயக்குநர் சஞ்சீவிராஜ் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியில் நாகை வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் ஞானவேலன், பொருளாளர் ஜி என் ரவி, ஒன்றிய செயலாளர்கள் அப்துல்மாலிக், அன்பழகன், தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி அமைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் கழக பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %