0 0
Read Time:7 Minute, 10 Second

அகத்தி கீரையில் சுண்ணாம்புச் சத்து, வைட்டமின் ஏ அதிகளவு உள்ளது. பால் சுரக்காத தாய்மார்கள் தொடர்ந்து அகத்திக் கீரையைச் சாப்பிட நன்கு பால் சுரக்கும். வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றும் சக்தி இக்கீரைக்கு உண்டு. இதன்மூலம் மலச்சிக்கல் நீங்கும்.

அகத்தி கீரை (Agathi keerai) வகைகள்:

அகத்தியில் வெள்ளை அகத்தி, செவ்வகத்தி, சாழை அகத்தி, பேரகத்தி, சிற்றகத்தி, சீமை அகத்தி என 5 வகைகள் உள்ளன. இதில், சாழை, பேரகத்தி மற்றும் சிற்றகத்தி ஆகிய மூன்றும் உணவுக்காகப் பயன்படுத்தப் படுவதில்லை. உணவாக உட்கொள்ளும் அகத்தியில் இரண்டு மட்டுமே, ஒன்று வெள்ளை நிறப் பூக்களை கொண்டது.இது பொதுவாக அகத்தி என்ற பெயரில் குறிப்பிடுவார்கள். மற்றொன்று செந்நிறப் பூக்களை உடையது இதனைச் செவ்வகத்தியென குறிப்பிடுவர். அகத்தியும், செவ்வகத்தி இந்த இரண்டும் பொதுவாக உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகின்றன.

அகத்தியின் சத்துகள்:

அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துக்கள் அடங்கியுள்ளதாக நம் பண்டையைச் சித்தர்கள் கூறியிருக்கின்றனர். இந்த நவீன காலத்தில், அகத்தி கீரையில், 8.4 சதவீதம் புரதமும், 1.4 சதவீதம் கொழுப்பும், 3.1 சதவீதம் தாது உப்புகளும் இருப்பதாக வேளாண் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் மாவுச்சத்து, இரும்புச் சத்து, வைட்டமின் A, கால்சியம் ஆகியவையும் அடங்கியுள்ளன.
அகத்தி மரத்தின் வேர், பூ, இலை மற்றும் பட்டை என அனைத்து பகுதிகளும் மருத்துவ பயன்கள் நிறைந்துள்ளன. இது உடலின் உட்புற மற்றும் வெளிப்புறத்திற்கும் (Internal and External use) மருந்தாக பயன்படுகிறது.

அகத்தி கீரையையும், மருதாணி இலையையும் சம அளவு எடுத்து நன்கு அரைத்து கால் வெடிப்புகளில் பற்றுப்போட்டால் வெடிப்புகள் மறையும்.


உடம்பில் காணப்படும் தேமலுக்கு அகத்தி கீரையின் இலையை தேங்கா எண்ணெய்யில் வதக்கி, அதை விழுதாக அரைத்து பூசி வந்தால் தேமல் முற்றிலுமாக மறையும். அகத்தி கீரை சாற்றை சேற்று புண்களில் தடவி வர சேற்று புண்கள் விரைவில் ஆறிவிடும்.
குழந்தைகளுக்கு நீர் கோர்த்துக் கொண்டால், இக்கீரையின் சாற்றை 5க்கு ஒரு பங்கு வீதம் தேன் கலந்து தலை உச்சியில் தடவினால் நீர்க்கோவை மறையும்.
அகத்தி கீரையை வேக வைத்து அரைத்துக் காயங்களுக்கு கட்ட விரைவில் ஆறும். அகத்திப் பூச்சாறை கண்களில் பிழிய கண்நோய் குணமாகும்.
அகத்தி கீரை வயிற்றுப் புண் என்னும் நோயைக் குணப்படுத்தும். இதற்கு அகத்திக்கீரையை நன்றாக கழுவி இதில் 4 பங்கு சின்ன வெங்காயத்தை சேர்த்து அகத்திக்கீரை சூப் தயாரித்து தினமும் 1 வேளை குடிக்கலாம்.

சிறுவர்களுக்கு:

உடல் வள்ர்ச்சிக்கு தேவையான புரதம் (Protein) இதனுள் அதிகம் இருப்பதால் வளரும் குழந்தைங்களுக்கு இது மிகவும் முக்கியமான ஒன்றாகும் .மேலும் இதில் சுண்ணாம்பு (Calcium ) சத்தும் இருப்பதால் பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். எலும்புகளுக்கு பலம் சேர்ப்பதால் எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சனைகள் முதுமையில் வரமால் தடுக்கலாம்.

செரிமானத்தை சீராக்கும் அகத்தி

இதில் நார்சத்து உள்ள காரணத்தினால் செரிமானத்தை சீராக்கும் ஆற்றலை பெற்றது. உடலில் செரிமானம் சரியாக இருப்பின் கழிவுகள் முறையாக வெளியற்றப்டுவதுடன் பசியையும் முறையாக தூண்டும். முன்னோர்கள் சொல்வழக்குப் படி , பசித்தால் மட்டும் சாப்பிடு என்பர். .பசி எடுத்து சாப்பிட்டாலே நாம் மற்ற நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.

கண்களை குளிர்ச்சியாக்கும் அகத்தி

இன்றைய இயந்திர வாழ்க்கையில் சிறுவர்கள் முதல் பெரியர்வகள் வரை அனைவரும் கணினி , கைப்பேசி போன்றவற்றை ஒரே இடத்தில அமர்ந்து பயன்படுத்துவதால் கண்களில் வறட்சி ஏற்படும் .இதனை சரி செய்ய அகத்தியை பயன்படுத்தி வர கண்கள் குளிர்ச்சி அடையும் பார்வை தெளிவாகும்.

உடல் உஷ்ணத்தை போக்கும் அகத்தி

இன்று பலருக்கு வெளியில் சென்று வேலை செய்யும் காரணத்தினால் உடல் உஷ்ணமாக இருக்கும். அகத்தியானது உடல் உஷ்ணத்தை குறைப்பதோடு , உடல் உஷ்ணத்தினால் ஏற்படக் கூடிய குடல்புண் , வாய்ப்புண் போன்ற வற்றை குணமாக்கும் தன்மை கொண்டது.

இரத்த அழுத்தத்திற்கு

இளம் பருவத்தினர் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் இரத்த அழுத்த நோய் பரவலாக காணப்படுகிறது. அகத்தியில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதோடு, சிறுநீரும் தடை இல்லாமல் செல்லவழி வகுக்கும் .

தோல் நோய்களுக்கு

அகத்தியுடன் தேங்காய் மற்றும் மஞ்சள் சேர்த்து அரைத்து தடவினால் உடலில் ஏற்படும் சரும பிரச்சனைகளான சொறி, சிரங்கு, தேமல் போன்றவை முற்றிலும் குணமாகும். அகத்தி கீரையுடன் சிறிது மஞ்சள் , அகத்தி இலை மற்றும் மருதாணி இலை இவை அனைத்தும் ஒரு சேர அரைத்து பித்த வெடிப்பு உள்ள இடத்தில தடவி வந்தால் பித்த வெடிப்பு இருந்த இடம் காணாமல் போகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %