டெல்லா வகை கொரோனா தொற்று அதிகரித்து வரக்கூடிய நிலையிலும், கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது தொற்று பரவல் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. ஆனால், டெல்டா வகை கொரோனா திரிபு வைரஸ் தொற்று புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் பல்வேறு மாநிலங்களிலும் டெல்டா வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தபோதும் கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
பிரிட்டனை தலைமையகமாக கொண்ட ஆங்கில மருத்துவ இதழான ‘தி லேன்செட்‘ எனும் இதழ் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டோரிடம் கோவிஷீல்டு 63% செயல்திறனை வெளிப்படுத்துவதாகவும், மிதமான மற்றும் கடுமையான நோயின் கட்டத்தில் இந்த தடுப்பூசி 81% செயல்திறனை வெளிப்படுத்துவதாகவும் லேன்செட் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ‘ஓமிக்ரான்’ வகை கொரோனா வைரஸ் புதிய அச்சத்தை நாட்டு மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. இந்த வகை வைரஸ் குறித்து கவனமாக இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கான விமான சேவையை பல நாடுகள் தற்காலிகமான ரத்து செய்துள்ளன. பிரிட்டனில் மூன்றாம் கட்ட தடுப்பூசிக்கு நாட்டு மக்கள் தயாராக வேண்டும் என அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்த பின்னணியில் ஆய்வு முடிவினை வெளியிட்டுள்ளது லேன்சென்ட். கோவிஷீல்டு தடுப்பூசின் இந்தியாவின் சீரம் நிறுவனம் உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.