0 0
Read Time:4 Minute, 0 Second

மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் நல குழுவிற்கு தலைவர் (ம) உறுப்பினர்களை நியமிக்கப்பதற்க்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது என மாவட்ட ஆட்சியர் இரா.லவிதா தகவல் தெரிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் மற்றும் விதிமுறைகளின்படி புதிதாக அமைக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் நல குழுவிற்கு தலைவர் (ம) உறுப்பினர்கள்களாக நியமிக்கப்படுவதற்காக கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளை கொண்ட தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குழந்தைகள் நல குழுவிற்கு ஒரு பெண் உட்பட தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் மூன்று வருட காலகட்டத்திற்கு நியமிக்கப்பட உள்ளனர்.

குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவர் அல்லது குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூக பணி அல்லது சமூகவியல் அல்லது மனிதவள மேம்பாடு ஆகியவற்றில் பட்டம் பெற்று தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் நியமணம் செய்யப்படும்போது 35 வயதுக்கு குறையாதவராகவும், 65 வயதைப் பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சமாக ஒரு நபர் இருமுறை மட்டுமே பதவி விகிக்க தகுதி உடையவர்களாவர், ஆனால் தொடர்ந்து இருமுறை பதவி வகிக்க இயலாது.

இதற்கான விண்ணப்ப படிவத்தை மயிலாடுதுறை
மாவட்ட இணையதளத்தில் (https://mayiladuthurai.nic.in/) பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் அல்லது நாகப்பட்டினம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து நேரடியாக பெற்றுக்கொள்ளலாம். தகுதிவாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு அதற்கான அமைந்த படிவத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அறை எண்.209, இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நாகப்பட்டினம் – 611003 என்ற முகவரியில் கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்கலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 18 – டிசம்பர் 2021 (18.12.2021)-ஆம் தேதிக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேரவேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமணம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது.

மேலும் விபரங்களுக்கு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், அறை எண். 209. இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நாகப்பட்டினம் என்ற முகவரியில் நேரிலோ அல்லது 04365 253018, 8015222327 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தெரிவித்துள்ளார்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %