1
0
Read Time:1 Minute, 3 Second
கடலூர் அருகே வெள்ளக்கரையில், நள்ளிரவில் ஊருக்குள் புகுந்த முதலையை வலையை வீசி பிடித்த வனத்துறையினர் அருகில் உள்ள குடிநீர் ஏரியில் கொண்டு சென்று விட்டனர்.
கனமழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி, வாய்க்கால்கள் வழியாக ஓடும் தண்ணீரில் முதலை, பாம்பு உள்ளிட்டவைகள் அடித்து வரப்படுகிறது. இந்நிலையில், நேற்றிரவு வெள்ளக்கரை ஆரம்ப சுகாதார நிலையத்தின் பின்புறம் முதலை ஒன்று செல்வதை பார்த்த அப்பகுதி மக்கள், உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த வனத்துறையினர் வலையை வீசி பிடித்தனர். இதனையடுத்து, மீட்கப்பட்ட முதலையைஅருகில் உள்ள சிதம்பரம் குடிநீர் ஏரியில் விடபட்டது.