வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக கடலூர் மாவட்டமே வெள்ளக்காடாக மாறியது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகம், மற்றும் தன்னார்வ அமைப்புகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்து வருகின்றனர்.
கடலூர் முதுநகர் காவல் நிலைய ஆய்வாளர் உதயகுமார் தனது சொந்த செலவில் கடலூர் முதுநகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சங்கோலிகுப்பம் காலனி பகுதியில் உள்ள 250 குடும்பங்களுக்கு அரிசி வழங்க ஏற்பாடு செய்து இந்த அரிசியினை கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் கரிகால் பாரி சங்கர் மூலம் பஞ்சாயத்துத் தலைவரிடம் ஒப்படைத்தனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காவல்துறை சார்பில் உதவி செய்ய வேண்டுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் அறிவுறுத்திய நிலையில் முது நகர் காவல் நிலைய ஆய்வாளர் உதயகுமாரின் இந்த செயல் கடலூர் மாவட்ட காவல் துறையினர் அனைவராலும் பாராட்டைப் பெற்றுள்ளது.
Read Time:1 Minute, 31 Second