பெங்களூரில் ஒமிக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளாதால், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ஒமிக்ரான் வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை சர்வதேச விமான நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். தமிழ்நாட்டில், இதுவரை ஆயிரத்து 807 மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனை மேற்கொண்ட தில் அனைவருக்கும் நோய் தொற்று இல்லை என முடிவுகள் வந்துள்ளதாக தெரிவித்தார்.
ஐரோப்பிய நாடுகள்,தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 11 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு முழுமையாக ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும் என சுகாதாரத் துறையினருக்கு அறிவுறுத்தபட்டுள்ளதாக தெரிவித்த அவர், பரிசோதனை முடிவு வரும் வரை விமான நிலையத்தில் உள்ள தனிமைப்படுத்தும் அறையில் பயணிகள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
11 நாடுகள் தவிர மற்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகளிலில் இரண்டு சதவீதம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருபவர்களில் பொருளாதார ரீதியாக பின்பதங்கி இருந்தால் அவர்களுக்கு அரசின் இலவச பரிசோதனை செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருவருக்கு ஒமிக்ரான் உறுதிசெய்யபட்டதால் ,பெரிய அளவில் அச்சமடைய தேவையில்லை என அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், இதுவரை 3 லட்சத்து 2 ஆயிரம் பரிசோதனை KIT-கள் ((taqpath)) உள்ளதாகவும், கூடுதலாக ஒரு லட்சம் KIT-களை மத்திய அரசிடம் கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.