0 0
Read Time:1 Minute, 39 Second

சென்னை: இந்திய கடற்படை தினத்தையொட்டி காமராஜர் சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார்.

1971 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ம் தேதியன்று, ஆபரேஷன் ட்ரைடென்ட் போது, இந்திய கடற்படையானது PNS கைபர் உட்பட நான்கு பாகிஸ்தான் கப்பல்களை மூழ்கடித்தது, நூற்றுக்கணக்கான பாகிஸ்தான் கடற்படை வீரர்களைக் கொன்றது.

இந்நாளில்,1971ல் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போரில் கொல்லப்பட்டவர்களும் நினைவுகூரப்படுகின்றனர். அந்த வகையில், 1971 ம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் போரில் உயிர்நீத்த கடற்படை வீரர்களின் நினைவாக நாட்டிற்கு இந்திய கடற்படையின் சாதனைகள் மற்றும் பங்கை அங்கீகரிக்க ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4 அன்று ‘இந்திய கடற்படை தினம்’ கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில்,சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார். மேலும், தமிழ்நாடு-புதுச்சேரி கடற்படை தளபதி புனீத் சதாவும் போர் நினைவுச்சின்னத்தில் மரியாதை செலுத்தினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %