0 0
Read Time:2 Minute, 49 Second

டெல்டா வகை கொரோனா வைரஸை விட தற்போது கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வகை வரைஸ் வீரியமானதாக இல்லை என்று அமெரிக்க விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது தடுப்பூசியின் மூலம் மனித இனம் இத்தொற்றிலிருந்து மெல்ல மீண்டு வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்தவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த சூழலில், டெல்டா வகை கொரோனா வைரஸை விட தற்போது கண்டறியப்பட்ட ஓமிக்ரான் வகை வரைஸ் வீரியமானது இல்லை என அமெரிக்க தொற்று நோய் நிபுணர் ஆண்டனி ஃபாசி தெரிவித்துள்ளார்.

அதேபோல இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிகுறிகள் லேசானதாகவே இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதேபோல தற்போதைய தடுப்பூசிகள் இத்தொற்றுக்கு எதிராக வீரியமானதாக செயல்படுமா என்கிற கேள்வி பதிலளித்த ஃபாசி, “இது குறித்தான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்னும் சில நாட்களில் இதன் முடிவுகள் வெளிவரும்.” என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், இது டெல்டா வகை கொரோனா தொற்றைக் காட்டிலும் வீரியம் குறைவானதாக இருக்கலாம். டெல்டா வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை காட்டிலும் ஒமிக்ரானால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த ஒமிக்ரான் தொற்று தற்போது 38 நாடுகளுக்கு பரவியுள்ளது. ஆனால் இதுவரை எந்த இறப்புகளும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %