0 0
Read Time:3 Minute, 15 Second

குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து; பயணித்தவர்கள் விவரம்

1.பிபின் ராவத்
2.மதுலிகா ராவத்
3.எல்.எஸ்.லிடர்
4.ஹர்ஜிந்தர் சிங்
5.ஜிதேந்திர குமார்
6.விவேக் குமார்
7.சாய் தேஜா
8.ஹாவ் சாட்பால்
9.குருசேவாக் சிங்

குன்னூரில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்து : 7 ராணுவ அதிகாரிகள் பலி; முப்படைத் தளபதி பிபின் ராவத் பயணம் செய்ததாக தகவல்!!

நீலகிரி : நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி மலைப்பாதையில் ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் 3 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வெல்லிங்டன் ராணுவ மையத்திற்கு சென்ற போது, வெலிங்டன் பயிற்சி கல்லூரியில் இருந்து 10 கிமீ தொலைவில் உள்ள காட்டுப்பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானது. 24 பேர் வரை பயணம் செய்யக்கூடிய விபத்துக்குள்ளான இந்த Mi – 17 V5 வகை ஹெலிகாப்டரில், முப்படைத் தலைமை தளபதி, அவரது மனைவி, ராணுவ அதிகாரிகள், எல்.எஸ். லிட்டர், ஹர்ஜிந்தர் சிங் உட்பட 14 பேர் பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளான இந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதால் சுமார் ஒரு மணி நேரமாக தீப்பிடித்து எரிகிறது. விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க கோவையில் இருந்து டாக்டர்கள் குழு குன்னூருக்கு விரைகிறது. இந்த நிலையில் விபத்து தொடர்பாக இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள பதிவில், இந்திய விமானப்படையின் Mi – 17 V5 வகை ஹெலிகாப்டரில் பிபின் ராவத் பயணித்தார் என்றும் முப்படைகளின் தலைமை தளபதி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் 5 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். 3 பேர் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், எஞ்சிய 9 பேரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இருந்த போதிலும் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் நிலைமை என்ன என்பது இதுவரை தெரியவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %