0 0
Read Time:3 Minute, 7 Second

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மனநலன் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த இளைஞரை மனநல மறுவாழ்வு மைய நிர்வாகிகள் மீட்டு 2 மாதங்கள் சிகிச்சை அளித்து, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா முன்னிலையில் இளைஞரின் பெற்றோரிடம் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

பீகார் மாநிலம் மாதேபூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் சௌத்ரியின் 24 வயதான மகன் ஹீராலால் சௌத்ரி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் மனநலன் பாதிக்கப்பட்டு, தனது பெற்றோர், மனைவியை பிரிந்து பல மாநிலங்களைத் தாண்டி தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார்.

மனநலம் பாதித்து சுற்றித்திரிந்த பீகார் இளைஞர் - குணமடைந்து குடும்பத்துடன் சென்ற நெகிழ்சி சம்பவம்

இந்நிலையில் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் சுற்றி திரிந்த ஹீராலால் சௌத்ரி  இறுதியாக கடந்த அக்டோபர் மாதம் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் ஆக்ரோஷமான மனநிலையுடன் கடைவீதி பகுதியில் வருவோர், செல்வோரை கட்டைக்கழியுடன் விரட்டி அச்சுறுத்தி வந்துள்ளார். இதுகுறித்து, தகவலறிந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசனின் உத்தரவின் பேரில் சீர்காழி கார்டன் மனநல மறுவாழ்வு மையத்தில் இருந்து அதன் இயக்குனர் ஜெயந்தி உதயகுமார் மற்றும் நிர்வாகிகள் சென்று அவரை மீட்டு, மறுவாழ்வு மையத்தில் வைத்து அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். 

மனநலம் பாதித்து சுற்றித்திரிந்த பீகார் இளைஞர் - குணமடைந்து குடும்பத்துடன் சென்ற நெகிழ்சி சம்பவம்


அங்கு அளிக்கப்பட்ட சிறப்பான சிகிச்சையின் காரணமாக இரண்டு மாதங்களிலேயே ஹீராலால் சௌத்ரி மனநலன் தேர்ச்சியடைந்து குணமடைந்தார். இதையடுத்து, அவரிடம் குடும்ப விவரங்களை அறிந்த சீர்காழி கார்டன் மனநல மறுவாழ்வு மையத்தின் இயக்குனர் ஜெயந்தி உதயகுமார் மற்றும் நிர்வாகிகள் பீகாரில் உள்ள அவரது உறவினர்களுக்கு தகவல் அளித்து, அவர்களை மயிலாடுதுறைக்கு வரவழைத்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா முன்னிலையில் அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தனது மகனை கண்ட ஹீராலால் சௌத்ரியின் தந்தை சுரேஷ் சௌத்ரி மாவட்ட ஆட்சியரின் காலில் விழுந்து நன்றி தெரிவித்த சம்பவம் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அலுவலர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %