டெல்டாவை விட வேகமாக பரவிவரும் ஒமிக்ரான்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
ஒமிக்ரான் பாதிப்பு, டெல்டா வகையைவிட , 1.5 நாள் முதல் 3 நாள்களில் வேகமாக இரண்டு மடங்காகி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
இது தொடா்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், இது தொடா்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், டெல்டா வகை தொற்று பரவல் அதிகமாகக் காணப்படும் இடங்களில் ஒமிக்ரான் தொற்றும் அதிகமாக பரவி வருவதாகவும் டெல்டா வகையைவிட, 1.5 நாள் முதல் 3 நாள்களில் இரண்டுமடங்கு வேகமாக பரவி வருவதாகவும் தெரிவித்துள்ளது. டெல்டாவை விட ஒமிக்ரான் வகை வைரஸ் பெரிய அளவில் வளர்ச்சி அடைவதற்கான உறுதியான சான்று உள்ளது என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 16-ஆம் தேதி நிலவரப்படி 89 நாடுகளுக்கு ஒமிக்ரான் தொற்று பரவி இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஒமிக்ரான் வகை கொரோனா பரவலைத் தடுக்கத் தேவையான சுகாதார, சமூக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் உலக நாடுகளுக்கு அது வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை நேற்றுவரை 126-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 43 போ் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதனைத் தொடா்ந்து, தில்லி (22), ராஜஸ்தான் (17), கா்நாடகம் (14), தெலங்கானா (8), குஜராத் (7), கேரளம் (11), ஆந்திரம் (1), சண்டீகா் (1), தமிழ்நாடு (1), மேற்கு வங்கத்தில் (1) ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.