0 0
Read Time:1 Minute, 59 Second

மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலகில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள 12 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 22.12.2021க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

காலியிடங்களின் எண்ணிக்கை : 12

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 01.07.2021 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அதிகப்பட்ச வயதாக SC/SCA/ST வகுப்பினருக்கு 37 வயதும், BC/MBC/BCM வகுப்பினருக்கு 34 வயதும், இதர பிரிவினருக்கு 32 வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுயவிவர குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை, தேவையான ஆவணங்களுடன் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மயிலாடுதுறை மாவட்டம்

விண்ணப்பிக்க கடைசி தேதி : 22.12.2021

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழுள்ள pdf படித்து தெரிந்துகொள்ளலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %