0 0
Read Time:3 Minute, 12 Second

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா பொங்கலூர் கிராமத்தில் அமைந்துள்ள பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமம் ஆதரவற்றோர் முதியோர் இலவச காப்பகத்தின் முதலாம் ஆண்டு விழா நடைபெற்றது.

சேவாஸ்ரமத்தின் நிறுவனர் மக்கள் சேவகர் முனைவர் குருஜி ஷிவாத்மா மற்றும் திருப்பூர் மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் அம்பிகா குத்துவிளக்கு ஏற்றி விழாவினை தொடங்கி வைத்தனர்.

அரசு அலுவலர்கள், நன்கொடையாளர்கள், தொழிலதிபர்கள் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்து தங்களால் முடிந்த உதவிகளை செய்தனர்.

நன்கொடையாளர்களை பாராட்டும் வகையில் சேவாஸ்ரமத்தின் நிறுவனர் மற்றும் சமூகநலத்துறை அலுவலர் சார்பில் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டு மடல் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சேவாஸ்ரமம் சார்பில் ஒரு மணி நேர பரதநாட்டியம் ஆடும் நிகழ்வு நடைபெற்றது.
பின்னர் நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

சேவாஸ்ரமத்தின் சேவையாளர்கள் கூறுகையில்:
இந்த சேவாஸ்ரமானது அரசு சார்ந்த எந்த ஒரு உதவியும் பெறாமல் தன்னார்வலர்கள், சமூக சேவகர்கள், மக்கள் கொடுக்கும் பொருட்கள் மற்றும் உதவிகளை வைத்து மட்டுமே நடத்தப்படும் ஆதரவற்ற முதியோர் இல்லமாகும். இப்பகுதியில் உள்ள பலர் தங்களின் பிறந்தநாள் விழா,திருமண நாள் விழா போன்ற நிகழ்ச்சிகளை பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமம் பொங்கலூர் கிளையில் வந்து கொண்டாடி மகிழ்ந்து இங்குள்ள முதியோர்களுக்கு புத்தாடைகள் வழங்கி மூன்று வேளையும் உணவு வழங்கி செல்கின்றனர். இளைஞர்கள், இளம்பெண்கள் மாணவச்செல்வங்கள், நீங்கள் தான் நாளைய எதிர்கால இந்தியாவின் ஆணிவேர்கள் என்றும் உங்கள் பகுதியில் உள்ள அனைவரிடமும் எடுத்துக்கூறி ஆதரவற்ற முதியோர்களுக்கு உதவ முன்வருமாறு அன்பு வேண்டுகோள் விடுத்தார்.
உங்கள் சேவை என்றும் முதியோர்களுக்கு தேவை எனவும் எளிதாக அனைவருக்கும் புரியும் வகையில் கருத்து தெரிவித்து நன்றி தெரிவித்தார்.

இந்நிகழ்வில் முக்கிய பிரமுகர்கள், பொங்கலூர் கிராம மக்கள், குழந்தைகள் பலர் கலந்து கொண்டனர்.

இவர்களுக்கு உதவ அழைக்க வேண்டிய எண்கள்
9842254055
9842272217

செய்தி: மகேஸ்வரன், விருதுநகர்.

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %