1 0
Read Time:4 Minute, 48 Second

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151, 044 24749002 என ஆகிய தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் மொத்தம் 16,768 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.

பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு பலர் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதற்காக ஆண்டுதோறும் தமிழ்நாடு போக்குவரத்துறை சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. தற்போது, வருவிருக்கும் பொங்கல் பண்டிகைக்கான சிறப்புப் பேருந்துகள் குறித்த அறிவிப்புகளை சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ராஜகண்ணப்பன் வெளியிட்டார்.

அதன் விவரம்:

2022 பொங்கல் திருநாளை முன்னிட்டு, சென்னையில் 5 சிறப்புப் பேருந்து நிலையங்களிலிருந்து, 11/01/2022 முதல் 13/01/2022 வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

  1. மாதவரம் புதிய பேருந்து நிலையம்
  2. கே.கே. நகர் மா.போ.க பேருந்து நிலையம்.
  3. அ) தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் (MEPZ)

ஆ) தாம்பரம் இரயில் நிலையப் பேருந்து நிறுத்தம்

  1. பூந்தமல்லி பேருந்து நிலையம்
  2. புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம், கோயம்பேடு

2022 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வரும் 11/01/2022 முதல் 13/01/2022 வரையில், சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன், 4,000 சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 10,300 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து 6,468 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,768 பேருந்துகள் இயக்கப்படும்.

பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர். பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் பயணிகளுக்காக 16/01/2022 முதல் 18/01/2022 வரையில், தினசரி இயக்கக் கூடிய 2100 பேருந்துகளுடன் 3,797 சிறப்புப் பேருந்துகளும், ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து 6,612 பேருந்துகளும் என ஆக மொத்தம் 16,709 பேருந்துகள் இயக்கப்படும்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 10 முன்பதிவு மையங்களும், MEPZ (தாம்பரம்
சானிடோரியம்) பேருந்து நிலையத்தில் ஒரு முன்பதிவு மையமும் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு செய்து கொள்ள நடைமுறையில் உள்ள இணையதன வசதியான www.tnstc.in. tnatc official app, www.redbus.in, www.paytm.com மற்றும் www.busindia.com போன்ற இணையதளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கு 94450 14450, 94450 14436 ஆகிய தொலைபேசி எண்களை (24×7) மணி நேரமும் தொடர்புகேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151, 044 24749002 என ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பொதுமக்களின் வசதிக்காக, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்திலிருந்து, மேற்கூறிய 4 பேருந்து நிலையங்களுக்கு செல்ல ஏதுவாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இணைப்புப் பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %