ஸ்ரீ நந்தனார் கல்விக் கழகம் ஸ்ரீ நந்தனார் மடம் அட்மினிஸ்ட்ரேஷன் டிரஸ்ட் சார்பில் மார்கழி ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு.63 நாயன்மார்களில் ஒருவரான திருநாளைப் போவார் என்று அழைக்கப்படும் ஸ்ரீ நந்தனார் சுவாமிகளின் வீதி உலா சிதம்பரத்தில் நடைபெற்றது.
ஊர்வலம் நான்கு முக்கிய வீதிகளில் சுற்றிவந்து தெற்கு ரத வீதி வழியாக ஸ்ரீ நடராஜ பெருமானை தரிசித்து ஸ்ரீ நந்தனார் கோயிலை அடைந்தது இந்த ஊர்வலத்தை ஸ்ரீ நந்தனார் கல்விக் கழகத்தின் தலைவர் டாக்டர் A. சங்கரன் துவக்கி வைத்தார். ஊர்வலத்தில் ஸ்ரீ நந்தனார் கல்விக் கழகTNPSC பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பி கனகசபை, நந்தனார் கல்விக் கழகத்தின் டிரஸ்ட் செயலாளர் டி கே எம் வினோபா கல்விக் கழக செயலாளர் கே அன்பழகன் கல்வி கழக துணைத் தலைவர் D.ஜெயச்சந்திரன் கல்விக் கழகப் பொருளாளர் இளைய அன்பழகன் ட்ரஸ்ட் பொருளாளர் பி பன்னீர்செல்வம் அன்பழகன் நந்தனார் கல்விக் கழகத்தில் ஆலோசகர் டாக்டர் ஏ தெய்வநாய ஸ்ரீ நந்தனார் கல்விக் கழகத்தின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் ஜிசந்திரசேகரன் கௌரவஉறுப்பினர் சிதம்பரம் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஏ முருகேசன் ஸ்ரீ நந்தனார் கல்விக் கழகத்தின் உறுப்பினர்கள் தங்க பாஸ்கரன் ஆர் ரங்கநாதன் V.திருவாசகம்
ஜிமணிவேல் K.இளையராஜா கே சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டுசிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் பக்தர்கள்அனைவருக்கும் இலவசமாக அன்னதானம் வழங்கப்பட்டது.
நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.