0 0
Read Time:3 Minute, 27 Second

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு நான்கு சிறப்பு ரயில்களை இயக்குவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வண்டி எண் 06001 தாம்பரம் – நெல்லை அதிவிரைவு சிறப்பு ரயில் ஜன. 12 புதன்கிழமை இரவு 09.45 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 8.15 மணிக்கு நெல்லை வந்து சேரும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 06002 நெல்லை – தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில் ஜன.13ம் தேதி வியாழக்கிழமை இரவு 09.30 மணிக்கு நெல்லையிலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.55 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.

வண்டி எண் 06005 சென்னை எழும்பூர் – நாகர்கோவில் அதிவிரைவு சிறப்பு ரயில் சென்னையிலிருந்து ஜன.13ம் வியாழக்கிழமை மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.20 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 06006 நாகர்கோவில் – சென்னை எழும்பூர் அதிவிரைவு சிறப்பு ரயில் நாகர்கோவிலில் இருந்து ஜன.14ம் தேதி மாலை 3.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.20 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும். வண்டி எண் 06004 நாகர்கோவில் – தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில் ஜன.16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 04.15 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.

மறுமார்க்கத்தில் வண்டி எண் 06003 தாம்பரம் – நாகர்கோவில் அதிவிரைவு சிறப்பு ரயில் ஜன.17ம் தேதி திங்கட்கிழமை மாலை 03.45 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்பட்டு அதிகாலை 4.20 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும். வண்டி எண் 06040 நெல்லை – தாம்பரம் சிறப்பு ரயில் நெல்லையில் இருந்து ஜன.16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு புறப்பட்டு அம்பாசமுத்திரம், தென்காசி, ராஜபாளையம் வழியாக சென்று மறுநாள் காலை 7.55 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 06039 தாம்பரம் – நெல்லை சிறப்பு ரயில் ஜன.17ம் தேதி காலை 10.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு விருதுநகர், கோவில்பட்டி, சாத்தூர் வழியாக சென்று இரவு 10.30 மணிக்கு நெல்லை வந்து சேரும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %