கடலூர் மாவட்டத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் 902 இடங்களில் நேற்று (26.12.2021) காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையிலும் அனைத்து ஆரம்பர சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் வீட்டிற்கு வீடு சென்று களப்பணியாளர்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்த சிறப்பு முகாம் நடைபெறுவதை குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி, ஆடுர் அகரம், சாத்தப்பாடி, புவனகிரி ஆகிய பகுதிகளில் முகாம் அமைத்தும் மற்றும் பொதுமக்களின் இல்லங்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்தப்படுவதையும் மாவட்ட ஆட்சியர் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பொதுமக்கள், கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து, பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றியும், அவ்வப்போது கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்தியும், அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நோய் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள கேட்டுக்கொண்டார்.
மேலும், பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி முதலாம் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய அனைவரும் அவசியம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு நோய்த்தொற்றிலிருந்து முற்றிலுமாக தங்களை பாதுகாத்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக குள்ளஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்தகம், புறநோயாளிகள் பிரிவு, ஆய்வகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மேற்கொள்ளப்படும் பணிகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்தும் மற்றும் மருத்துவமனை அலுவலர்களின் வருகைப் பதிவேட்டினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் துரை கி. சரவணன், சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர் ரவி, சுகாதார துணை இயக்குநர் டாக்டர் மீரா, மாவட்ட மலேரியா அலுவலர் கெஜபதி, வட்டாட்சியர்கள் அன்பழகன், சையது அபுதாஹீர், குள்ளஞ்சாவடி மருத்துவமனை மருத்துவர் டாக்டர் ரேவதி, புவனகிரி வட்டார மருத்துவ அலுவலர் சிவக்குமார் மற்றும் தடுப்பூசி களப்பணியாளர்கள், அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.