0 0
Read Time:2 Minute, 6 Second

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா வில்லியநல்லூர் சேண்டிருப்பு ஊராட்சியில் கடந்த 1997ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தற்போது 24 ஆண்டுகளை கடந்து இடிந்து விழும் தருவாயில் உள்ளதால் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

இந்த பள்ளியில் 43 மாணவ குழந்தைகள் படித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு நெல்லையில் நடைபெற்ற பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் 4 குழந்தைகள் பலியானதை தொடர்ந்து மாணவ, மாணவிகளை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்ப பயப்படுகிறார்கள் என்று அப்பள்ளி ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

இதனால் பக்கத்து கட்டிடமான அங்கன்வாடி கட்டிடத்தில் மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலோடு மாணவ மாணவிகளுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த கட்டிடத்தில் மேற்கூரைகள், விரிசல் ஏற்பட்டு முக்கிய சாராம்சமாக உள்ள கட்டிடத்தை தாங்கும் பீம்கள் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் தருவாயில் உள்ளது. கட்டிடத்தின் பின்புறத்தில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு ஜன்னல் பகுதியில் முற்றிலும் சேதம் ஏற்பட்டு கம்பிகள் தெரிகின்றது. இதனால் ஆசிரியர்களும் அச்சத்தில் உள்ளனர். உடனே இந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் அமைத்து தர தமிழக அரசுக்கு அப்பள்ளியின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நிருபர்:முரளிதரன்,சீர்காழி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %