மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, புத்தூரில் உள்ள புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 28.12.2021 செவ்வாய் கிழமை அன்று வணிகவியல் துறையில் வணிகவியல் மன்றம் துவக்க விழா நடைபெற்றது.
இதில் வணிகவியல் துறைத்தலைவர் இணைப்பேராசிரியர் மு.திருநாராயணசாமி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் கு.விஜயலெட்சுமி அவர்கள் தலைமை தாங்கினார்.
இவ்விழாவிற்க்கு சிறப்பு விருந்தினராக அண்ணாமலைப் பல்கலைகழக வணிகவியல் துறை பேராசிரியர் முனைவர் கு.சுந்தர் அவர்கள் கலந்துகொண்டு வணிகவியல் பட்டப்படிப்புக்குரிய வேலைவாய்ப்புகள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.
இவ்விழாவில் வணிகவியல் துறை பேராசிரியர்கள் முனைவர் வே.மகேஷ்வரி, முனைவர் வே.சுரேஷ், முனைவர் ம.ராஜசேகர், முனைவர்வ.தம்பிஞானதயாளன் மற்றும் பல்வேறு துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்களும் 150 வணிகவியல் துறை மாணவர்களும் கலந்துகொண்டனர் மேலும் தமிழக அரசின் அறிவுறுத்தலை பின்பற்றும் வகையில் மாணவர்களும் பேராசிரியர்களும் நெகிழிகளை பயன்படுத்தாமல் மஞ்சள் துணி பையை பயன்படுத்துவோம் பிறரையும் பயன்படுத்த விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் என கையில் மஞ்சள் பையை ஏந்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இறுதியாக முனைவர் வே. மகேஸ்வரி நன்றியுரையாற்றினார். விழா இனிதே நிறைவுற்றது.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.