0 0
Read Time:3 Minute, 15 Second

ஆங்கில புத்தாண்டையொட்டி நள்ளிரவில் கோயில்களை திறந்தால் “முற்றுகை போராட்டம்” என இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் அறிக்கை விடுத்துள்ளார்.

இதில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது.

“புத்தாண்டு கொண்டாட்டங்கள் என்ற பெயரில் கலாச்சார,பண்பாட்டு சீரழிவு நடைபெறுகிறது. நள்ளிரவில், நடு வீதியில் குடித்துவிட்டு கும்மாளமிடும் கேடுகெட்ட செயல்கள் அதிகரித்து வருவது வேதனையளிக்கிறது. இதற்கெல்லாம் மேலாக நள்ளிரவில் இந்து கோயில்கள் திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படுவது கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள கோயில்கள் அதிகளவில் திறக்கப்படுகின்றன.

தேவாரம் பாடப்பட்ட திருக்கோயில்களெல்லாம் இன்று வியாபார கோயில்களாகி விட்டன. அண்டை மாநிலமான ஆந்திர பிரதேச அரசாங்கம் கோயில்களில் ஆங்கில புத்தாண்டு வழிபாடுகள் தேவையில்லை என உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து கோயில் நிர்வாக அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் “யாருக்காகவும், எந்த விதமான சிறப்பு பூஜைகளும் ஜனவரி – 1 அன்று நடத்த வேண்டிய அவசியமில்லை” என கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசு டிசம்பர் – 31 நள்ளிரவில் கோயில்கள் திறக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். இதனை இந்து சமய அறநிலையத் துறையின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு கோயில்கள் நள்ளிரவில் திறக்கப்படாது என்பதனை உறுதி செய்ய வேண்டும். தனியார் நிர்வாகத்தின் கீழ் உள்ள முக்கியமான பெரிய கோயில்களிலும் இந்த நடைமுறையை பின்பற்ற அறிவுறுத்த வேண்டும். நள்ளிரவில் கோயில்கள் திறக்கப்படுவது ஆகம விதிகளுக்கு புறம்பானது.

டிசம்பர் – 31, ஆங்கில புத்தாண்டையொட்டி அகால வேளையில் கோயில்கள் திறக்கப்படுமானால் பக்தர்கள், பெண்கள், துறவிகள், சமய பெரியவர்களை ஒன்று திரட்டி, அறநிலையத் துறை அலுவலகங்கள் முன் தேவாரம், திருவாசகம் மற்றும் திருமுறை பாராயணம் செய்து கைலாய வாத்தியங்கள் இசைத்து இந்து மக்கள் கட்சியின் சார்பில் “முற்றுகை போராட்டம்” நடத்தப்படும்.

இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %