0 0
Read Time:1 Minute, 11 Second

சிதம்பரம் அடுத்த குமராட்சியில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வர்த்தக சங்க கூட்டம் வர்த்தக சங்கத் தலைவரும் ஊராட்சி மன்றத் தலைவருமான கேஆர்ஜி. தமிழ்வாணன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் வர்த்தகர்கள் இடையே ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கி ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களை பரிமாற்றிக் கொண்டனர் பின்னர் மறைந்த வர்த்தக சங்க கௌரவத் தலைவர் சக்கரவர்த்தி நினைவாக திருவுருவப்படத்தை பதித்து அச்சடிக்கப்பட்ட காலண்டரை அனைவருக்கும் வழங்கப்பட்டது.

இதில் செயலாளர் மணிவண்ணன் ஒருங்கிணைப்பாளர் அப்துல் பாசித் பொருளாளர் ராஜேந்திரன் துணை ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் துணை செயலாளர் துரைசிங்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %