தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், திமுக தேர்தல் அறிக்கை தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கொரோனா தொற்று பரவல் மற்றும் ஒமிக்ரான் பரவலுக்கு இடையே, இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரானது இன்று காலை சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொடங்குகிறது. ஆளுநர் உரையில் திமுக தேர்தல் அறிக்கையின் அம்சங்கள் அதிகளவில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் திமுக தேர்தல் அறிக்கை தொடர்பான பல்வேறு அறிவிப்புகள் வெளியான நிலையில், இன்று தொடங்கும் கூட்டத் தொடரில் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற மற்ற வாக்குறுதிகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், எதிர்க்கட்சிகள் தரப்பில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை, முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் கேள்வி எழுப்பப்படலாம் எனக் கூறப்படுகிறது.