0 0
Read Time:2 Minute, 31 Second

நாகை மாவட்டத்தில் கடந்த 15 தினங்களாக டி.எப்.சி. என்ற தனியார் நுண்கடன் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் பல்வேறு கிராமங்களில் சுய உதவிக்குழு கடன் வழங்குவதாக வசூல் வேட்டையில் இறங்கியுள்ளனர். கடனை பெறக்கூடிய பெண்கள் விண்ணப்பக் கட்டணம் 960 ரூபாய் முதலில் கட்ட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

அவர்களின் பேச்சை நம்பிய நாகை, கீழ்வேளூர், சிக்கல், திருக்குவளை, எட்டுக்குடி மீனம்பநல்லூர், கீழையூர், காமேஸ்வரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பணம் கட்டியுள்ளனர். இந்த நிலையில் பதினைந்திற்கும் மேற்பட்ட பணியாளர்களை வைத்து பொது மக்களிடம் பணத்தை வசூல் செய்த தனியார் நிறுவனத்தை நடத்துபவர்களிடம், கடன் எப்போது வழங்கப்படும் என ஊழியர்கள் கேட்டுள்ளனர்.

ஆனால் நிறுவனத்தை நடத்துபவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், கிராம மக்களுக்கு தகவல் சொன்ன நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அவர்களை பிடிப்பதற்கு திட்டம் போட்டு உள்ளனர். அதனைத் தொடர்ந்து நாகை மாவட்டம் சிக்கல் அடுத்துள்ள பனைமேடு கிராமத்திற்கு காரில் வந்த நிறுவனத்தை நடத்துபவர்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர்.

தொடர்ந்து மோசடி கும்பலில் இருவர் தப்பி ஓடிய நிலையில் ஒருவரை பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள் அவரை கீழ்வேளூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த கீர்த்தி என்பதும், அவர் பல பெயர்களை சொல்லி மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. நாகை அருகே போலி நுண் கடன் வழங்கும் நிறுவனத்தை நடத்தும் கும்பல் பொதுமக்களிடம் சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தி: வினோத்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %