0 0
Read Time:2 Minute, 38 Second

கடலூர் மாவட்டத்தில் நேற்று 68 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு தான் அதிகம் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் 64 ஆயிரத்து 749 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், புதிதாக 68 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இதில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 52 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இது தவிர சென்னையில் இருந்து அண்ணாகிராமம் வந்த ஒருவருக்கும், நோய்த்தொற்று அறிகுறிகளுடன் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப் பட்டு இருந்த 15 பேருக்கும் பாதிப்பு உறுதியானது.

சிகிச்சை:

நேற்று முன்தினம் வரை 63 ஆயிரத்து 719 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர். நேற்று 18 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது வரை கொரோனாவுக்கு 876 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதித்த 162 பேர் கடலூர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளிலும், 42 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நோய் பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %