0 0
Read Time:5 Minute, 35 Second

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களில் காலியாக உள்ள 16 கிராம உதவியாளர் பணியிடங்கள் கீழ்கண்ட இனசுழற்சி முறையில் நிரப்பப் பட உள்ளது.

இந்த பணியிடங்களுக்கு, 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழில் பிழை இன்றி எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 01.07.2021 அன்றைய நிலையில் 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர், மற்றும் ஆதிதிராவிடர் (அருந்ததியினர்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / சீர் மரபினர் / சீர்மரபினர் , பிற்படுத்தப்பட்டோர் ( முஸ்லீம் ) ஆகியோருக்கு 37 வயதும், இதர வகுப்பினருக்கு 32 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் மயிலாடுதுறை வட்டத்தினை சேர்ந்தவர்களாகவும், மயிலாடுதுறை வட்டத்திலேயே நிரந்தரமாக வசித்து வருபவராகவும் இருக்க வேண்டும். தகுதியும், விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் தங்கள் சுயவிவரம், கல்வித் தகுதி சான்றுகள், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதிச்சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்பக பதிவு விபரம் ஆகியவற்றின் நகல்களுடன் விண்ணப்பதாரரின் சுய முகவரி எழுதப்பட்ட ரூ.25க்கான அஞ்சல் தலை ஒட்டப்பட்ட 25*10 செ.மீ அளவுள்ள உறை ஆகியவற்றுடன் விண்ணப்பத்தினை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வரும் 19.01.2022 மாலை 5.45 மணிக்குள் மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகத்தில் கிடைக்கத் தக்க வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.

அதற்கு பின்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. தமிழ்நாடு கிராம உதவியாளர் பணியமைப்பு விதிகளின் படி தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களில் காலியாக உள்ள 15 கிராம உதவியாளர் பணியிடங்கள் கீழ்கண்ட இனசுழற்சி முறையில் நிரப்பிட உள்ளது.

விண்ணப்பதாரர்கள் மயிலாடுதுறை வட்டத்தினை சேர்ந்தவர்களாகவும், குத்தாலம் வட்டத்திலேயே நிரந்தரமாக வசித்து வருபவராகவும் இருக்க வேண்டும்.

தகுதியும், விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் தங்கள் சுயவிவரம் , கல்வித் தகுதி சான்றுகள், குடும்ப அட்டை , ஆதார் அட்டை , சாதிச்சான்றிதழ் , வருமான சான்றிதழ் , இருப்பிட சான்றிதழ் , மற்றும் வேலை வாய்ப்பக பதிவு விபரம் ஆகியவற்றின் நகல்களுடன் விண்ணப்பதாரரின் சுய முகவரி எழுதப்பட்ட ரூ.25க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட 25*10 செ.மீ அளவுள்ள உறை ஆகியவற்றுடன் விண்ணப்பத்தினை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ எதிர்வரும் 19.01.2022 மாலை 5.45 மணிக்குள் மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகத்தில் கிடைக்கத் தக்க வகையில் அனுப்பி வைத்திட வேண்டும்.

அதற்கு பின்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. தமிழ்நாடு கிராம உதவியாளர் பணியமைப்பு விதிகளின் படி தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு , 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழில் பிழை இன்றி எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 01.07.2021 அன்றைய நிலையில் 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர், மற்றும் ஆதிதிராவிடர் (அருந்ததியினர்) , மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / சீர் மரபினர் / சீர்மரபினர் , பிற்படுத்தப்பட்டோர் ( முஸ்லீம் ) ஆகியோருக்கு 37 வயதும், இதர வகுப்பினருக்கு 32 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %