Read Time:6 Minute, 49 Second
இனிப்புச் சுவை கொண்ட இயற்கையான உணவு வகையில் ஒன்றாக கரும்பு இருக்கிறது. கரும்பு தெற்காசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு பயிர் வகையாகும். இன்று உலகின் பெரும்பாலான கண்டங்களில் கரும்பு பயிரிடப்படுகிறது. மனிதர்களின் உடல் நலத்திற்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடிய சத்துக்கள் கரும்பில் நினைத்து இருக்கிறது. இந்த கரும்பை நன்றாகப் பிழிந்து சாறெடுக்கடப்பட்ட கரும்பு ஜூஸ் மக்களால் அதிகம் விரும்பி அருந்தப்படுகிறது. அந்தக் கரும்பு ஜூஸ் அதிகம் அருந்துவதால் மனிதர்களின் உடலுக்கு ஏற்படக் கூடிய மருத்துவ ரீதியான நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
- தங்களுக்கு வயதான முக தோற்றம் ஏற்படுவதை விரும்புபவர்கள் யாருமே இல்லை. வயது ஏற, ஏற உடலில் இருக்கும் செல்களின் வளர்ச்சி குறைந்து, முதுமைத் தோற்றம் ஏற்படவே செய்வதை தடுக்க முடியாது. எப்போதும் இளமை தோற்றத்துடன் இருக்க விரும்புபவர்கள் கரும்பு ஜூஸ் பருகுவது சிறந்த பலன்களைத் தருகிறது. இதிலிருக்கும் ஆன்ட்டி – ஆக்ஸிடென்ட்ஸ், பிளேவனாயிட்ஸ், பினோலிக் கூட்டுப்பொருட்கள் சருமத்தில் ஈரப்பதத்தை தன்மையை கூட்டுகிறது. தோலில் ஒரு பளபளப்பு தன்மையை கொடுத்து உடலுக்கு இளமைத் தோற்றத்தைத் தருகிறது.
- உடற் சோர்வு நீங்க என்னென்னவோ உணவுகள், பானங்களை மக்கள் பலர் அருந்துகின்றனர். அதிக வெப்பத்தால் உடல் களைப்படைந்து விடுபவர்கள் உடனடியாக புத்துணர்ச்சி பெறுவதற்கு அருந்தவேண்டிய பானம் கரும்பு ஜூஸ் ஆகும். கரும்பு ஜூஸில் சர்க்கரை சத்துக்கள் அதிகம் இருக்கின்றன. இவை உடலில் சென்று ரத்தத்தில் இழந்த சக்கரை சத்துக்களை ஈடு கட்டி, உடல் உடனடியாக சுறுசுறுப்பு, உற்சாகம் அடைய உதவுகிறது. விளையாட்டு வீரர்கள், கடுமையான உடல் உழைப்பு கொண்டவர்கள் தினந்தோறும் காலை அல்லது மதிய வேளையில் கரும்பு ஜூஸ் அருந்தி வந்தால் நாள் முழுவதும் உற்சாகமாக வேலை செய்வதற்கான ஆற்றல் கிடைக்கிறது.
- கருவுற்றிருக்கும் பெண்கள் அடிக்கடி அருந்த வேண்டிய சிறந்த பானமாக கரும்பு ஜூஸ் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. இதில் போலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி 9 சத்துகள் அதிகம் இருப்பதால், இவை குழந்தை குறைபாடுகளோடு பிறக்கும் நிலையை தடுக்கிறது.
- பொதுவாகவே பற்களில் சொத்தை ஏற்பட்டவர்கள், சுகாதாரத்தை முறையாக பேணாதவர்களுக்கு வாய் துர்நாற்றம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிறது. உணவில் ஊட்டச்சத்து குறைபாடு இருந்தாலும் இந்த வாய் துர்நாற்றம் உண்டாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு சிறந்த இயற்கை தீர்வாக கரும்பு ஜூஸ் இருக்கிறது. கரும்பு பயிரில் நிறைந்திருக்கும் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்து பற்களின் எனாமலை வலுப்படுத்துகிறது. பற்சொத்தை போன்றவை ஏற்படாமல் பற்களையும் ஈறுகளையும் பாதுகாக்கிறது. வாய் துர்நாற்றத்தையும் போக்குகிறது.
- பலருக்கும் சாப்பிட்ட உணவு முழுமையாக செரிமானம் அடையாமல் போவதற்கு காரணம் அவர்களின் வயிற்றினுள்ளே செரிமான அமிலங்களின் சுரப்பில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் குறைபாடுகள் ஆகும். கரும்பு ஜூஸ் அடிக்கடி பருகுபவர்களுக்கு வயிறு மற்றும் குடல் சுத்தமாகிறது. மேலும் வயிற்றில் உணவு செரிமானத்துக்கு உதவும் அமிலங்களின் சுரப்பை அதிகப்படுத்தும். அதன் வேதியியல் சமச்சீர் தன்மையையும் சரியான விகிதத்தில் வைக்கிறது. எனவே செரிமானத் திறன் மேம்பட விரும்புவார்கள் தினமும் ஒரு வேளை கரும்பு ஜூஸ் அருந்துவது நல்லது.
- சிறுநீர்க்கடுப்பை குணப்படுத்தும். குடல்புண், மூலம், வெட்டை சூடு இவைகளை குணப்படுத்தும். புண்களை ஆற்றும். கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது.
- கரும்புச் சாறுடன், இஞ்சி சாறு கலந்து அருந்த வலிப்பு குணமாகும். ஒரு கப் சாறுடன் சிறிதளவு வெல்லம், ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து சாப்பிட உடல் குளிர்ச்சி பெறும்.
- கரும்பு சர்க்கரையும் சிலவகை மருத்துவக் குணங்களைக் கொண்டதாகும். சர்க்கரை கலந்த நீரால் புண்களை கழுவி வர புண்கள் ஆறும்.
- கரும்புச் சாறுடன், இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு கலந்து அருந்திவர பித்தம் குறையும். உள் சூடு, குடல்புண், மூலம் போன்றவை குணமாகும்.
- கரும்புச் சாறுடன் சிறிதளவு தேன், எலுமிச்சை சாறு கலந்து அருந்த மலச்சிக்கல் தீரும். கரும்பு கற்கண்டு தாதுவலிமையை கூட்டும். பாலில் கரும்பு கற்கண்டு, முருங்கைப்பூ சேர்த்து காய்த்து
- தினசரி இரவு ஒரு கப் சாப்பிட்டு வர தாது புஷ்டி ஏற்படும். தணலில் சர்க்கரையோடு சாம்பிராணிப் பொடி சேர்த்து புகைக்க கிருமிகள் அழியும், கரப்பான், கொசுத்தொல்லை மறையும்.