1 0
Read Time:4 Minute, 11 Second

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அழகு நிலையம் நடத்திவரும் பிரபல தொழிலதிபரின் மகளுக்கும், காட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, பண்ருட்டியை அடுத்த தனியார் திருமண மண்டபத்தில் திருமண நிகழ்ச்சி நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து நேற்று இரவு பெண் அழைப்பு நடைபெற்றபோது, மணப்பெண், தனது உறவினர்களுடன் நடனமாடிக் கொண்டு, மண்டபத்திற்கு வந்துள்ளார்.

இதை விரும்பாத மணமகன், மணமகளிடம் சென்று ஏன் இப்படி செய்கிறாய் எனக் கேட்டு அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது திடீரென மணமகளைக் கன்னத்தில் அறைய, அவரும் பதிலுக்கு அறைந்தார்.

இதைக் கண்ட மணமகளின் தந்தை, திருமணத்திற்கு முன்னரே என் மகளை எப்படி அடிக்கலாம் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், ‘உனக்கு எனது மகளைத் திருமணம் செய்துகொடுக்க விருப்பமில்லை. எனவே மண்டபத்தை விட்டு வெளியே செல்’ என்று கூறியுள்ளார். மணமகளும் இதையே கூறியுள்ளார். இதையடுத்து நிச்சயிக்கப்பட்ட மணமகன் அங்கிருந்து வெளியேறினார்.

இதையடுத்து மணமகளின் தந்தை, உறவினர்களுடன் கலந்து பேசி, செஞ்சியைச் சேர்ந்த முறை மாப்பிள்ளையுடன், நிச்சயிக்கப்பட்ட தேதியில் திருமணம் நடத்த திட்டமிட்டனர். அதன்படி இன்று காலை பண்ருட்டி திருவதிகை கோயிலில் முறை மாப்பிள்ளையுடன் மணப்பெண்ணுக்குத் திருமணம் நடைபெற்றது.

உடனே மணப்பெண்க்கும் முறை மாமனுடன் பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் திருக்கோயில் திருமணம் நடைபெற்றது. இதுபற்றி, தகவலறிந்து மணமகள் ஸ்ரீதர் பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது-

என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி நிச்சயம் செய்து திருமண மண்டபத்தில் டிஜே நிகழ்ச்சியில் திருமணத்திற்கு வந்த உறவினர்கள் ஆடிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது என்னையும், ஜெய்சந்தியாவையும் நடனம் ஆடச் சொல்லி பெண் வீட்டு உறவினர்கள் கட்டாயப்படுத்தி ஆட வைத்தனர். மேலும் பெண் வீட்டு உறவினர் மணப்பெண் கழுத்தில் கையை வைத்துக் கொண்டு நடனமாடியது எனக்கு மிகவும் வருத்தம் அளித்தது.

ஏன் இது போல் நடந்து கொள்கிறாய்? என்று கேட்டதற்கு திருமணத்தை நிறுத்திவிட்டு மணப்பெண்ணுக்கு விருப்பமில்லாமல் அன்றே வேறு ஒரு ஆணுடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனால் நானும் எனது குடும்பமும் உறவினர்களும் மனவேதனை அடைந்து உள்ளோம். திருமணம் நிச்சயதார்த்தம் முதல் திருமணம் வரை எங்களுக்கு ரூபாய் 7 லட்சம் செலவாகி உள்ளது. எனவே எனது வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது.

ஆகையால் மணமகள் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மணமகன் ஸ்ரீதர் தனது புகாரில் கூறியுள்ளார். இந்த சம்பவம் பண்ருட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %