0
0
Read Time:1 Minute, 9 Second
சிதம்பரம் அருகே சி.முட்லூரில் ஆண்டுதோறும் கன்னி திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதாவது திருமணமாகாத ஆண்கள், திருமணமாகாத பெண்கள் கன்னி சிலைகளை செய்து வழிபடுவார்கள். மேலும் குழந்தை வரம் கேட்டும் வழிபடுவார்கள். அவ்வாறு வழிபட்டால் பக்தர்களின் கோரிக்கை நிறைவேறும் என்பது ஐதீகம். வழக்கம்போல் இந்த ஆண்டும் பொங்கல் விழா முடிந்து கரிநாள் அன்று கன்னி திருவிழா தொடங்கியது. கடந்த 10 நாட்களாக பக்தர்கள் கன்னி சிலைகளை செய்து வழிபட்டனர்.
10-வது நாளாக நேற்று கன்னி சிலைகளுடன் பக்தர்கள், மேளதாளத்துடன் ஊர்வலமாக வெள்ளாற்றுக்கு சென்றனர். அங்கு சிறப்பு வழிபாடு நடத்திய பின்னர், சாமி சிலைகளை தண்ணீரை கரைத்து வணங்கினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.