0 0
Read Time:4 Minute, 20 Second

மைதா என்பது கோதுமையில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ஒரு வகை உணவு பொருள் ஆகும். இதில் சுத்தமாக நார்ச்சத்து இல்லை. மேலும் இதனை இரசாயன பொருட்கள் பயன்படுத்தி வெண்மையாகவும் மற்றும் சுத்தமாகவும் மாற்றுகின்றனர்.

மைதா வகை உணவுகளில் அதிக அளவு கிளைசெமிக் இன்டெஸ் கொண்டது. இதனை நீங்கள் அதிக அளவில் எடுத்துக்கொள்ளும்போது உங்களின் இரத்த சர்க்கரையின் அளவு மிக வேகமாக அதிகரிக்கும். மேலும் இது உங்களுக்கு நீரிழிவு நோயினை ஏற்படுத்தும் முக்கிய காரணியாக அமையும்.

மைதா வகை உணவுகளை அதிகம் எடுத்து வந்தால் உங்கள் உடலில் கொழுப்பு அதிகரிக்கும். மேலும் இது உடல் பருமன், இருதய கோளாறு, இரத்த அழுத்தம் போன்ற உடல் உபாதைகளை கொண்டு வரும்.

மைதாவில், கோதுமையில் உள்ள அளவுக்கு நார்ச்சத்து இல்லை . எனவே இதனை உண்டு வந்தால் உங்களுக்கு மலசிக்கல் பிரச்சினை உண்டாகும். எனவே அடிக்கடி மைதா உணவுகளை உண்டு வருவதை தவிர்க்கவும்.

மைதா உணவுகளை அதிகம் உண்டு வந்தால் செரிமான கோளாறு போன்ற பிரச்சினை ஏற்படும். மைதா உணவுகளை அதிகம் உண்டு வந்தால் உங்கள் இரத்த நாளங்களில் அதிக அளவு கொழுப்பு படியும் . முக்கியமாக இருதய இரத்த நாளங்களில் கொழுப்பு படிந்து இருதய கோளாறு, இரத்த குழாய் அடைப்பு, போன்ற பலவித பிரச்சினைகள் ஏற்படும்.

உடலுக்கு நன்மைதரும் தானியங்களில் ஒன்று கோதுமை. இந்த கோதுமையில் இருந்துதான் மைதா தயாரிக்கப்படுகிறது. ஆனால் கோதுமையில் இருக்கும் சத்துக்கள் நீக்கப்பட்டு பிரிக்கப்படுகிறது என்பதுதான் உண்மை. கோதுமையில் இருந்து மைதாவாக பிரித்தெடுக்கும்போது மாவு பழுப்புநிறத்தில் இருக்கிறது. இந்த பழுப்பு நிறத்தைப் போக்கி பளீர் வெள்ளை நிறம் கொடுக்க துணிகளின் வெண்மை நிறத்துக்கு பயன்படுத்தும் பென்சைல் பெராக்ஸைடு, குளோரின் என கெடுதி தரும் பல இராசயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அலொக்ஸான் என்னும் வேதிப்பொருள் மைதாவை மிருதுவாக்கவும், சுவைக்காகவும் சேர்க்கப்படுகிறது. நாள்பட்ட மைதா கெடாமல் இருக்க மெதில் புரோமைடு என்னும் ரசாயன புகைமூட்டத்தை செலுத்தி மைதாவை பாதுகாக்கிறார்கள். இந்த கேடு தரும் ரசாயனமும், கெமிக்கல் பூச்சும் அதிகமாக உடலில் சேரும் போது பக்கவிளைவுகள் உண்டாவதற்கு வாய்ப்புண்டு.

மைதாவால் உண்டாகும் நோய்கள்:

இன்று உலகில் அதிகம் பேரை பாதித்திருக்கும் நோய்களில் முக்கியமானது நீரிழிவு. அதாவது சர்க்கரை நோய். அநேகம் பேருக்கு சர்க்கரை நோயை உண்டாக்கிய பெருமை மைதாவையே சேரும் என்று சொல்லலாம். மைதாவில் சேர்க்கப்படும் அலொக்ஸான் என்னும் வேதிப்பொருள் உடலில் இன்சுலின் சுரப்பதைக்கட்டுப்படுத்துகிறது. இதனால் மைதாவில் தயாரித்த உணவுகள் பிரட், பேக்கரி, பரோட்ட என எதுவாக இருந்தாலும் இதை சாப்பிட்டதும் உடலில் மிகவேகமாக இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை உயர்த்துகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %