மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பேரூராட்சி, காவாளமேட்டுத்தெரு வில் வசிக்கும் ஏழை மூதாட்டி சுப்பம்மாள், சிதலமடைந்த வீட்டில் வசிப்பதை அறிந்த முன்னாள் பேரூராட்சி கவுன்சிலரும், பொதுதொழிலாளர் சங்க பொறுப்பாளருமான மாணிக்க.அருண்குமார் தனது நண்பர் சுலைமானுடன் மூதாட்டியின் வசிப்பிடம் சென்று பார்வையிட்டு, வீடு அமைப்பதற்காக தேவைப்படும் பணமதீப்பீடு தயார் செய்து வழக்கம்போல், தனது நண்பர்களுக்கு சமூக வலைதளம் வாயிலாக செய்தியை தெரிவித்து “உறைவிடம் உறுதிப்படுத்தும் உன்னத சேவைத்திட்டம்” வாயிலாக 4 வது பயனாளராக சுப்பம்மாள் அவர்களுக்கு குடில் அமைக்க முயற்சிசெய்தார்.
அதனை அறிந்த அவரது உறவுகளான பிரான்ஸ் தொழிலதிபர்கள் தர்பார் மரைக்காயர், முகமது பாசில் மரைக்காயர், டி.ஜி.மகாதேவன்,
இராதாசுந்தர், ரஜினி முருகன், ஆனந்த பாபு, ஷர்மிளா, தஞ்சாவூர் சசிகுமார் மு.கீர்த்திவாசன்
ஆகியோரின் நிதி உதவியோடு ரூ.30000 மதிப்பீட்டில் குடிலும், ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களும் வழங்கினார்.
இந்நிகழ்வில் வெ.ஆசைத்தம்பி, இராமகிருஷ்ணன், ஆசிரியர்.சு.மாதவன் வர்த்தகசங்கத்தலைவர் சேட்டு (எ) நடராஜன், பொருளாளர் இளந்தமிழன்,
நந்தக்குமார் டி.ஜி மகாதேவன், ரஜினி முருகன், இரவி, கே.பி.எம்.ஹரிஷ்,விஷ்வா ஆகியோர்கலந்து உடன் இருந்தனர்.
ஆசிரியர் சு.மாதவன் குடில் அமைக்க பெரும்முயற்சி எடுத்த மாணிக்க.அருண்குமாருக்கும் நிதிஉதவி அளித்த நல்உள்ளங்கள் அனைவருக்கும் பாராட்டும் நன்றியும் தெரிவித்தார். மேலும் கிராமவாசியான ஜெயரதிமனோகரன் அவர்கள் தானாகவே நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தார்.
உதவியை பெற்றுக்கொண்ட மூதாட்டி குடில் அமைத்துகொடுத்த மாணிக்க.அருண்குமாருக்கும், உதவி புரிந்தோருக்கும் கண்ணீருடன் நன்றி தெரிவித்தார்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.